Monday, December 23, 2024
Home > பயண அனுபவம்

ஜென்னல் ஓர சீட்டிலிருந்து… கார்னர் சீட்டிற்கு… நடுவிலே கொஞ்சம் காதல்…

ஜென்னல் ஓரத்தில் அமர்ந்து இரயிலில் செய்வது யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். மாலை சூரியன் மறையும் நேரத்தில் பயணத்தில் கூடவே துணைக்கு ஒரு நல்ல புத்தகம் மட்டும் இருந்துவிட்டால், அந்தப் பயணமேஎவ்வளவு ரசனையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே இக்கதை. என் நண்பன் தேவா, பூனேவில் இருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. இப்போது, வேளச்சேரி பகுதியில் புது வீடு ஒன்றை வாங்கியிருந்தான். சித்திரை

Read More

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே… – #பயண அனுபவம் – 9

பாண்டிச்சேரி பீச்சில் நடந்த ஒரு சின்ன அனுபவமே இப்பதிவு. நாங்கள் நான்கு பேர் பாண்டிச்சேரி சென்றிருந்தோம். (தேவேந்திரன் (தேவ்) , திருமுருகன் (திரு), தமிழரசன் (தமிழ்) மற்றும் நான்) பாண்டிச்சேரி கடற்கரையில் இருக்கும் காந்தி சிலைக்கு எதிரே காந்தி மைதானம் இருக்கிறது. அந்த மைதானததைக் கடந்து சாலைக்கு அந்தப் பக்கம் சென்றால் பாரதி பூங்க வரும். பாண்டிச்சேரி சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் அந்த பூங்காவிற்கு தவறாமல் சென்றுவிடுவர். அந்த அளவிற்கு வெளிநாட்டவர்

Read More

இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8

தலைப்பு சொல்வதைப் போல, இப்பதிவு முத்தம் சம்பந்தப்பட்டது தான். பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவமே இப்பதிவு எழுதக் காரணம். பொது தளத்தில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பததை என் சம காலச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். சமூகத்தில் எல்லோரும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் சமூகத்தை குறுக்கு வெட்டாக ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தோம் என்றால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கும். நம்

Read More

என்னைத் தாலாட்ட வருவாளா…? – #பயண அனுபவம் – 7

மெத்தையில் கவிழ்ந்துப் படுத்திருந்தேன். தூக்கம் தெளிந்திருந்தது. ஆனால் எழுந்திருக்கவில்லை. அறையில் இருந்த வெளிச்சமும், சாலையில் இருந்து வரும் வண்டி சப்தங்களும்  வெகு நேரமாகிவிட்டதை உணர்த்தின. எழுந்து மணி பார்த்தேன். 8.30 ஆகியிருந்தது. காலைக்கடன்களை முடித்து, சோம்பல் முறித்து, அப்படியே ஒரு நகர் வலம் சென்று டீ குடித்துவிட்டு,  பேப்பர் வாங்கி வரலாம் என கிளம்பினேன். அன்றைக்கு வேலூர்  அரசு மருத்துவமனை அருகில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். எப்போழுது வேலூர் வந்திருந்தாலும் அந்த லாட்ஜ்

Read More

போட்டு தாக்கனும்… தலை கீழ போட்டு திருப்பனும்… – #பயண அனுபவம்-6

மேட்டர் நடந்த அன்று… (என்னது மேட்டரா? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது… அந்த சீன் எல்லாம் இங்க இல்லங்க… ) இரவு 10.30 மணி… சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே இருக்கும் தனியார் சொகுசு பேருந்து அலுவலகத்தின் அருகே அன்று நின்றிருந்தேன். என் நண்பர் ஒருவர், திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் அந்த தனியார் நிறுவனத்தின் சொகுசு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தார். சேலத்தில் அந்த பேருந்து 10-15 நிமிடங்கள் நிற்கும். அப்பொழுது

Read More