Monday, December 23, 2024
Home > கேள்விபதில் (Page 3)

பெண் வேலைக்கு போகலாமா? – கேள்விபதில் – 6

கேள்வி பதில் 6: கேள்வி: மார்ச்-8 ஆம் தேதி அன்று வரும் மகளிர் தினம் பற்றி கருத்து கூறுமாறு என் தோழிகளின் வேண்டுகோளுக்கான பதில்... பெண்கள் தினம், மகளிர் தினம், உமன்ஸ் டே... இது போன்ற கொண்டாட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலம் ஆகி வருகிறது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. மேலும் இதற்கு சக ஆண்களின் ஆதரவும் இருப்பது நமது சமூகம் சற்றே வளர்ச்சி அடைந்திருக்கிறது என நம்பிக்கையூட்டுகிறது. ஆனால்

Read More

காதலர் தினக் கொண்டாட்டங்கள் தவறா?- கேள்விபதில்-5

கேள்வி: நாளுக்கு நாள் காதலர் தினக் கொண்டாட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது தவறா? அதேபோல் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கான எதிர்ப்புகளும் வலுத்த வண்ணம் இருக்கின்றன. இது தவறா? இது தவறா? அது தவறா? என் ஆராயும் முன் இவற்றுள் எதோ ஒன்று தான் சரியாக இருக்கும் என வழக்கமான பிம்பங்களை விட்டொழிவோம். உடனே இரண்டும் சரி என்ற முடிவிற்கும் வந்துவிடாதீர்கள். ஆழமான புரிதல் வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கான தேடலின் ஒரு

Read More

பட்டிக்காடு – ஆணா? பெண்ணா? – #கேள்விபதில்-4

கேள்வி: பட்டிக்காடு - ஆணா? பெண்ணா? நிச்சயம் இந்தக் கேள்வி எழும் எனத் தெரியும். காரணம், என் இணையதளத்தில் ஆணா? பெண்ணா? என எந்த விதமான தகவல்களும் குறிப்பிடவில்லை. பெண் என்று எண்ணி பட்டிக்காடு தளத்தை வாசிக்கும் வாசகருக்கு நான் பெண்ணாகவும், ஆண் என்று எண்ணி வாசிப்பவருக்கு நான் ஆணாகவும் மட்டுமே தெரிய வேண்டும். அதேசமயம், பெண் வாசகருக்கு ஆணின் பார்வையில் இருக்கும் நியாயங்களையும், ஆண் வாசகருக்கு பெண்ணின் பார்வையில் இருக்கும் நியாயங்களையும் எடுத்துரைக்கும்

Read More

நாய்கள் ஏன் செல்லப்பிராணிகளா? – கேள்விபதில்-3

கேள்வி: நாய்கள் வீட்டில் வளர்க்க ஏன் தடை விதிக்கக் கூடாது? நியாயமான கேள்விதான். ஆனால் இதற்கு பதில் சொல்வது, தொங்கும் கயிற்றின் மேல் பயணம் செய்வதற்கு சமம். இன்றைய நிலையில் பல இளைஞர்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் நெருங்கிய உறவு. முதியவர்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் நடை பயிற்சியின் போது துணை வருபவை. பல பெண்களுக்கு வளர்ப்பு நாய்கள் தான் பாதுகாப்பாளர்கள். குழந்தைகளுக்கோ நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம். இவை ஒரு புறம் இருக்கட்டும்,

Read More

கேள்விபதில்-2

கேள்வி:இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்? இன்றைய குடும்பங்களில் தமிழ் வாழ்கிறதா? சாகிறதா? என்று பல பட்டிமன்றங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். பட்டிமன்றங்களின் முடிவுகள் பெரும்பாலும் தமிழ் மொழி, குடும்பங்களில் மெல்ல சாகிறது என்றோ, ஒரு சில விவாதங்களில் தமிழ் மொழி வளர்கிறது என்றோ தான் இருக்கும். இக்கட்டுரையின் நோக்கமும் தமிழ் மொழிக்கு குடும்பங்களில் வாழ்வா சாவா என்பது பற்றியது தான். முதலில்

Read More