Monday, December 23, 2024
Home > கவிதை (Page 10)

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே...   நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே...   வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே...   நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட

Read More

யாரடி நீ எனக்கு…

என் எண்ணங்களிலே வருகிறாய்... என்னை புன்னனைக்க வைக்கிறாய்... என்னருகிலே எப்போதாவது வருகிறாய்... ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்... என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்... யாரடி நீ எனக்கு... உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்... உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்... உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்... யாரடி நீ எனக்கு... உன்னிடம் பேச மனம் துடிக்கிறது... உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது... பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது... உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது... உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது... யாரடி நீ எனக்கு... விலகினால்,

Read More

எம் மொழியும் அழகு… அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு…

ஆதிமொழி எம் மொழி... திணிக்காதே உம் மொழி... இல்லையேல் தேடுவோம் தனி வழி... இனியும் வேண்டாமே இந்த அக்கப்போர்... முயன்றால் மீண்டும் சந்திப்பீர் மொழிப்போர்... உம் மொழியும் அழகு... எம் மொழியும் அழகு... அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு... ஆக்காதே எங்களை தனிமை... திணிக்காதே எங்கள் மீது பகைமை... வேற்றுமையே ஒற்றுமை... படையெடுப்பது உம் வரலாறு... அதனை எப்போதும் முறியடிப்பது எம் வரலாறு... ஏன் எப்போதும் மொழியினால் இந்த தகராறு... எதிர்த்து நிற்போம் எந்நாளும், வீழ்ந்தாலும் ஆவோம் வரலாறு... போதும் போதும் திணித்தது போதும்... மீறினால் போராட்டங்களும் உக்கிரமாய் மாறும்... வீழ்வது நாமாக இருந்தாலும்... வாழ்வது

Read More

நமது அழகு… நம் காதலில்…

உன்னை நினைக்கயில்... இந்த உலகை மறக்கிறேன்... காதலில் கிறங்கையில்... அதன் போதையில் சுற்றுகிறேன்... நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை... உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை... நீயில்லாத என் வாழ்வில்... மழையும் வெயிலும் நான் உணரவில்லை... வெறுமையை தவிர வேறோன்றுமில்லை... வலியின் அழகை ரசிக்கிறேன்... வலியின் அழகு... துன்பத்தில்... இன்பத்தின் அழகு... வெற்றியில்... நிலவின் அழகு... மாலையில்... சூரியனின் அழகு... காலையில்... மழையின் அழகு... துளியில்... இரவின் அழகு... இருளில்... உலகின் அழகு... வேற்றுமையில்... குடும்பத்தின் அழகு... ஒற்றுமையில்... மயிலின் அழகு... தோகையில்... குயிலின் அழகு... குரலில்... உனது அழகு... உன் மனதில்... எனது அழகு... உன் நினைவில்... நமது

Read More

காதல் தந்த ஊடலை… காமம் கொண்ட பாதையால்…

உன் மேலுள்ள காதலில்... நாம் கொண்ட மோதலில்... நாம் பட்ட காயங்கள்... என் மனதை கிழிக்கின்றதே... உன் மேலுள்ள அன்பிலும்... உன் மீதுள்ள பாசமும்... நான் கொண்ட நேசமும்... என் வலிகளை மறைக்கின்றதே... உன் மேலுள்ள ஏக்கத்தில்... நான் இழைத்த தவறுகளால்... நீ கொண்ட கோபத்தில்... நியாயங்கள் இருக்கின்றதே... உன் மேலுள்ள மோகமும்... நம் காதலின் தாக்கமும்... நம் பிரிவின் சோகமும்... என் உலகை இருள்கின்றதே... காதல் தந்த தாகமும்... உன் மேலுள்ள மயக்கமும்... இல்லறம் நோக்கிய துவக்கமும்... இன்று உடைந்திருக்கிறதே... நான் செய்த பிழையினால்... நாம் கொண்ட இறுக்கத்தில்... இனியும் செய்யும் தாமதத்தில்... நம் காதல் தோற்கின்றதே... போதுமிந்த தாமதம்... இனியும் வேண்டாம் நாடகம்... நீ

Read More