அவள் யாரோ…
அவள் யார் என்று தெரியாது... அங்கு, நான் தேடி வந்தவனும் கிடையாது... அவள், மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்... கண்களில் கண்ணீருடன்... அவளருகில் நான் சென்றேன்... என்னை கண்டுகொண்டவள், அழுதாள், இன்னும் கனமாக... என் மனம் வாடியது, இதைக் கண்டு... அவள் அருகில் சென்றமர்ந்தேன்... அழுகை வேண்டாம் பெண்ணே என்றேன்... எதற்கும் கலங்காதே... அச்சம் தவிர் பெண்ணே என்றேன்... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... மீண்டு வா கண்ணே என்றேன்... சொல்லி முடிப்பதற்குள்... என் மடியிலே சாய்ந்து அழுதாள்... என் கண்களும் கலங்கியது... அடக்கிக்கொண்டேன் நான் கண்ணீரை... ஆறுதலாய் இருந்திருக்கும்... அது அவளுக்கு... என் மடியிலே படுத்து அழுதாள்...
Read More