Monday, December 23, 2024
Home > சிறுகதை (Page 3)

கருப்பி… என் கருப்பி… – #சிறுகதை

என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான்.

Read More

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச்

Read More

பெண்ணே! உன் நினைவுகளுக்கு நன்றி!!!

என் தோழியின் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்தேன். கல்லூரியில் அவள் என் வகுப்புத் தோழி. இரவு விருந்து முடிந்ததும், என் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தமையால், எங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தது. வேலை, காதல், மோதல், கிசு கிசு, கல்யாணம் என பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தோழி, குமுதாவிற்கு, அவளின் வருங்கால கணவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு

Read More

என் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… – சிறுகதை

“திவ்யா… திவ்யா… சீக்கிரம்  எழுந்திருடி … மாப்பிள்ளை உன்னுடன் பேசனுமாம்” என அம்மா என்னை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த நான் திக்கென்று எழுந்து அம்மாவின் போனை வாங்கி காதில் வைத்தேன். “உன் போன் என்ன ஆச்சு திவ்யா… காலையில இருந்து மூன்று முறை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவேயில்லை? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றார் ஆனந்த். ஆனந்த கிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்த். வீட்டில் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை. எங்களைப் போலவே,

Read More

கோபியும் நண்பர்களும்

“கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்க வேணாம்” என அன்புவும், நவீணும் முடிவாக இருந்தார்கள். “ஆமா, நீங்க பணக்கார வீட்டு பசங்க. வேலை இல்லனா தொழில பாக்க போயிடுவீங்க. காட்ட வத்து படிக்க வச்ச எங்க அப்பா முன்னாடி என்னாலலாம் கைய கட்டி நின்னு திட்டு வாங்க முடியாது டா” என்று சொன்னேன். “நான், கேம்பஸ் இன்ட்ர்வியூவில் கலந்துக்கப் போறேன். லக்கு இருந்தா வேல கிடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கோபமாக கேண்டீனில் இருந்து

Read More