Tuesday, December 24, 2024
Home > பெண் (Page 3)

நீங்க SHUT UP பண்ணுங்க

தலைப்பே சொல்லிவிடும், இப்பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் நடிகை ஓவியாவைப் பற்றியது என்று. காரணம் “நீங்க சட் அப் பண்ணுங்க” என்ற பஞ்ச் வசனத்தின் வீரியம் அப்படி. இப்பதிவின் நோக்கம் ஓவியாவிற்கு வாக்கு சேகரிப்பதல்ல. மாறாக, ஓவியாவிற்கு ஏன் இவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றது என்பதனை விளக்கவே இப்பதிவு. இன்றய தேதியில் (21/07/2017-வெள்ளி) அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி ஆகிய மூவரும் மக்கள் வாக்களித்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இம்மூவரும் வெளியேற்ற மக்களுக்கு பல்வேறு காரணங்கள்

Read More

அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

நண்பர்களுடன் (ஆண் நண்பர்கள் மட்டும்) பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கே என் நண்பர்கள் குழுவினருடன்  பேசிக் கொண்டிருந்த பொழுது நான் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிலே இப்பதிவை எழுதத் தூண்டியது. பெயர்களும், நிகழ்வுகளும், ஊர்களும் நாகரிகம் கருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களைப் புண் படுத்த எழுதப்பட்ட பதிவல்ல, மாறாக இத்தளத்தை வாசிக்கும் வாசகிகளுக்காக எழுதப்பட்டது. நான் கேட்ட கேள்வி இதோ... கேள்வி: எந்த மாதிரியான

Read More

போட்டு தாக்கனும்… தலை கீழ போட்டு திருப்பனும்… – #பயண அனுபவம்-6

மேட்டர் நடந்த அன்று… (என்னது மேட்டரா? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது… அந்த சீன் எல்லாம் இங்க இல்லங்க… ) இரவு 10.30 மணி… சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே இருக்கும் தனியார் சொகுசு பேருந்து அலுவலகத்தின் அருகே அன்று நின்றிருந்தேன். என் நண்பர் ஒருவர், திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் அந்த தனியார் நிறுவனத்தின் சொகுசு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தார். சேலத்தில் அந்த பேருந்து 10-15 நிமிடங்கள் நிற்கும். அப்பொழுது

Read More

என் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… – சிறுகதை

“திவ்யா… திவ்யா… சீக்கிரம்  எழுந்திருடி … மாப்பிள்ளை உன்னுடன் பேசனுமாம்” என அம்மா என்னை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த நான் திக்கென்று எழுந்து அம்மாவின் போனை வாங்கி காதில் வைத்தேன். “உன் போன் என்ன ஆச்சு திவ்யா… காலையில இருந்து மூன்று முறை போன் பண்ணிட்டேன். நீ எடுக்கவேயில்லை? ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றார் ஆனந்த். ஆனந்த கிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்த். வீட்டில் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை. எங்களைப் போலவே,

Read More

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்குச் செல்ல அரசாங்க பேருந்திற்காக காத்திருந்தேன். அதற்கு முன்னே, இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து திருச்சிக்குச் செல்ல காத்திருந்தன. முதல் பேருந்தின் அருகே நின்றுக் கொண்டு, என் கைபேசியில் அடுத்து என்ன பாடல் கேட்கலாம் என நொண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துனர், “திருச்சி… திருச்சி…” “திருச்சி…” “திருச்சி.. திருச்சி…” என ரைமிங்காக டையமிங்காக கத்திக் கொண்டிருந்தார். அதாவது அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த என்னைப் பார்த்து,

Read More