நன்றி… நன்றி… நன்றி…
பல தடங்களுக்குப் பிறகு, இனிதே துவங்கிவிட்டது எனது இனையதளம்
பட்டிக்காடு…
நகர வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புற நாகரிக வாழ்வைத் தேடி…
நாகரிகம் என்பது, எனது பார்வையில், மனிதன் கடந்து வந்த பாதைகளின் எச்சங்களையும், வரப்போகும் முன்னேற்றங்களையும் உள் வாங்கிக்கொள்ளும் தன்மைக் கொண்டது. பட்டிக்காடு, நாட்டுப்புறம் போன்ற சொற்கள் நாகரிக வாழ்க்கையில் பின்தங்கியுள்ளவர்களை கேலி பேச பயன்படும் சொற்களாகி வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இன்றைய நகரங்கள் யாவும் பலபல கிராமபுரங்களை உள்ளடக்கியதே.
இன்றைய நகரங்கள் எவ்வளவு தான் நாகரிக வளர்ச்சியடைந்து இருந்தாலும் அவை அன்றும், இன்றும், என்றும் பல கிராமங்களின் கூட்டமைப்பே. இதனை வாசிப்பவர்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால் கள நிலவரம் இதுதான்.
வயல்கள் கட்டிடங்களாயின…
ஒடைகள் சாக்கடைகளாயின…
குட்டைகள் குப்பைமேடுகளாயின…
ஏரிகள் மைதாணங்களாயின…
வரப்புகள் தெருக்களாயின…
கிராமம் தன் சுயத்தை இழந்து…
நகரம் என்னும் குடையின் கீழ் வந்து…
ஊராகி, உருமாறி,
நாகரிகம் செழித்து,
கான்கிரிட் காடாகிவிட்டது…
பல கிராமங்களை கொன்று,
பலபல புதிய நாகரிக பகுதிகளாய்
உருவானது தான் நகரம்.
அது லண்டனாக இருந்தாலும் சரி,
நமது சென்னை கோவையானாலும் சரி.
இன்றைய நாகரிகங்களில்
ஒன்றாமல் வாழும்
நகரத்து நாட்டுப்புறங்களின்
கதைகள் தான்
பட்டிக்காடு தளத்தின் களம்.
- விரைவில் விவரமாய்…
its really nice. gud start, post all ur kavidhai here please.
எழுத்துக்களே பேராயுதம்.
தமிழ்ச்சமூகம் தடைகளின்றி தாரளமாக இணையம் வாயிலாக இதயம் இணைந்திட !
என்து புன்முறுவலும் பேராதரவும்.
மிக்க நன்றி தோழா.
அதரவு மட்டும் போதாது, பங்களிப்பும் தேவை தோழனே
இப்படிக்கு
பட்டிக்காடு
உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழத்துக்கள். இனிதே தோடரட்டும் இப்பயணம்…..
மிக்க நன்றி தோழா. பயணத்தில் என்றும் உடனிருப்பாய் என நம்புகிறேன்.
இப்படிக்கு
பட்டிக்காடு