Monday, December 23, 2024
Home > கவிதை > காதல் தந்த ஊடலை… காமம் கொண்ட பாதையால்…

காதல் தந்த ஊடலை… காமம் கொண்ட பாதையால்…

உன் மேலுள்ள காதலில்…

நாம் கொண்ட மோதலில்…

நாம் பட்ட காயங்கள்…

என் மனதை கிழிக்கின்றதே…

உன் மேலுள்ள அன்பிலும்…

உன் மீதுள்ள பாசமும்…

நான் கொண்ட நேசமும்…

என் வலிகளை மறைக்கின்றதே…

உன் மேலுள்ள ஏக்கத்தில்…

நான் இழைத்த தவறுகளால்…

நீ கொண்ட கோபத்தில்…

நியாயங்கள் இருக்கின்றதே…

உன் மேலுள்ள மோகமும்…

நம் காதலின் தாக்கமும்…

நம் பிரிவின் சோகமும்…

என் உலகை இருள்கின்றதே…

காதல் தந்த தாகமும்…

உன் மேலுள்ள மயக்கமும்…

இல்லறம் நோக்கிய துவக்கமும்…

இன்று உடைந்திருக்கிறதே…

நான் செய்த பிழையினால்…

நாம் கொண்ட இறுக்கத்தில்…

இனியும் செய்யும் தாமதத்தில்…

நம் காதல் தோற்கின்றதே…

போதுமிந்த தாமதம்…

இனியும் வேண்டாம் நாடகம்…

நீ தான் என் உயிர் நாடி…

வருகிறேன் உன்னைத் தேடி…

வென்றேடுப்போம்… நம் வாழ்க்கையை…

காதல் தந்த ஊடலை…

காமம் கொண்ட பாதையால்…

 உ.கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…

செப்டெம்பர் 14, 2019

காலை 11.15