பெண்கள் தினமாம்…
பெண்கள் தினமாம்…
ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட
பெண்கள் தினமாம்…
பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான்
கொண்டாட்டமா?
மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன
திண்டாட்டமா?
பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும்
சமூகமே…
பெண்ணிற்கு என்று…
எப்போது தரப்போகிறாய்… பாதுக்காப்பை…?
எப்போது தரப்போகிறாய்… உடல் சுதந்திரத்தை…?
எப்போது தரப்போகிறாய்… பெண்ணுரிமை…?
எப்போது தரப்போகிறாய்… உண்மையான சொத்துரிமை…?
எப்போது தரப்போகிறாய்… வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை…?
எப்போது தரப்போகிறாய்… அரசியலுரிமை…?
எப்போது தரப்போகிறாய்… முழு சுதந்திரம்…?
அதுவரை…
வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்…
எப்போதும் வேண்டாமே…
ஆணிற்கென்று தனியொரு தினம்…
ஆண் பெண்ணாக முடியாது…
பெண் ஆணாகவும் முடியாது…
ஆனாலும் இருபாலரும்…
ஆக முடியும் நல்ல மனிதனாய்…
இங்கே தினங்கள் தேவையேயில்லை…
நல்ல மனங்களே தேவை…
அறிவியலின் கூற்றாய்…
ஆண்ணில்லாமல் பெண்ணில்லை…
பெண்ணில்லாமல் ஆண் இல்லவேயில்லை…
எந்நாளும் பெண்களையும் கொண்டாடுவோம்…
எந்நாளும் ஆண்களையும் கொண்டாடுவோம்…
பெண்ணிற்காகவே ஆண்…
ஆணிற்காகவே பெண்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
மார்ச் 08, 2020
மாலை 04.39 மணி…