அவளை மறக்க போராடுகிறேன்
இப்போதும்…
அவளின் நினைவுகளால் தவிக்கிறேன்
எப்போதும்…
என் கனவெல்லாம் அவள் தான்…
என் நினைவெல்லாம் அவள் தான்…
என் சுகமும் அவள் தான்…
என் துக்கமும் அவள் தான்…
அவளின் சிரிப்புச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது… என் காதுகளில்…
அவளின் கடைசி அழுகை வலித்துக்கொண்டே இருக்கிறது… என் மனதில்…
அவள் என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டாள்…
என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டாள்…
ஆனால்…
எப்போதும் அவள் என் உயிரிலே கலந்திருக்கிறாள்…
அணு அணுவாய்…
– உ.கா.
மே 30, 2019
காலை 8.25 மணி