ஆயிரம் இங்குண்டு சாதி…
வரலாற்றில் அரசாளாத சாதியிருக்கா மீதி…
அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதுமே காலத்தின் நீதி…
அயர்சியில்லாத முயற்சியிருந்தால் யவருக்கும் கிடைக்காது அநீதி…
வீழாத சாதியென்று ஏதும் இங்குண்டா…
வாழாத சாதியென்று ஏதும் இங்குண்டா…
இல்லை,
வரலாற்றில், யாரையும் அடிமைப்படுத்தாத சாதியென்று ஒன்றுண்டா…
நல்லெண்ணம் கொண்டவன் வாழாத வரலாறு இங்குண்டா…
தீய சக்திகள் வீழாத வரலாது இங்குண்டா…
வென்றவனின் வரலாறு கிடைக்காமல் இருந்ததுண்டா…
தோற்றவனின் வரலாறு எங்காவது கிடைத்ததுண்டா…
வரலாற்றை வரலாறாய் எவரும் பார்பதுண்டா…
ஆதலால் வரும் மோதலை எவரும் தவிர்ததுண்டா…
இனி யாரும் பேச வேண்டாம் சாதி…
இனி காலம் சொல்லும் சமூகநீதி…
வேண்டும் ஒரே சாதி…
அது மனிதசாதி…
– உ.கா.
ஜீன் 15, 2019
காலை 5.54 மணி