உன் மேல் கொண்டுள்ள காதலை
அறிய முடியவில்லை முதலில்…
ஆனால்… எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய்
என் நினைவில்…
நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும்
என் வாழ்வின் முடிவில்…
கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட
உன் அக அழகில்…
அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு
நான் உன்னைப்பார்த்த நொடியில்…
உன்னைப்பார்க்க நான் வருகிறேன்
எகப்பட்ட தடங்கலில்…
அதையெல்லாம் தாண்டி வருகையில்
எதேதோ செய்கிறது என் உடலில்…
இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள்
உன்னைப்பார்க்கும் ஆசையில்…
காத்திருந்து உன்னைக் காண்பதில்
எனக்குள் இருப்பது பரவசமெனில்…
உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும்
நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்…
இனி, உன் நினைவைக் கொண்டே வாழ்ந்திடுவேன்
இவ்வுலகில்…
ஆனால்…
என்னுடன் நீ வாழ இசைந்தால், நான் அமைப்பேன், நமக்கு நல்லதொரு எதிர்காலம்
நம் புது உலகில்…
உன் சம்மதத்திற்காக காத்திருப்பதைத் தவிர
எனக்கு சுகமிருக்கும் வேறு எதில்…
நான் காத்திருப்பதெல்லாம் நம் காதலுக்காக
நீ சொல்லப்போகும் பதிலில்…
– உ.கா.
நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…
ஜூன் 25, 2019
காலை 6.41.