அவளைப் பார்க்க பார்க்க என்
பேச்சு மறக்குதே…
அவளுடன் பேச நினைத்தாலே என்
மூச்சு முட்டுதே…
அவள் என்னருகில் வந்தாலே என்
இதயம் நிற்குதே…
அவள் வராத நாளில், என் கண்கள் எப்போதும்
அவளைத் தேடுதே…
அவளின் சிரிப்பு சத்தம் தினமும் என்
தூக்கத்தை தொலைக்குதே…
தினமும் காலையில் உதிக்கும் சூரியன்
அவள் வரும் கனவை கெடுக்குதே…
அவளைப்பற்றி பேச எனக்கு
ஆயிரமாயிரம் இருக்குதே…
அவளை நினைக்கும் வேளையில் எனக்கு
இவ்வுலகம் கிறங்குதே…
எப்போதாவது என்மேல் படும் அவள் பார்வையால்,
அதிவேகமாய், என் இதயம் துடிக்குதே…
அவளுடன் அன்பால் சேர வழி தெரியாமல்
என் மனம் தவிக்குதே…
இதற்கு மேலும் அவளிடன் என் காதலைச் சொல்ல
வாய்ப்பு கிடைக்காதே…
சொல்ல கிடைத்த வாய்பெல்லாம் அவளைக் கண்ட
ஆனந்தத்தில் தவறியதே…
நான் பேச முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டாள்
இருந்தாலும் அவளிடம் சொல்லத்தோனுதே…
என் காதலை…
– உ.கா.
நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…
ஜூன் 26, 2019
இரவு 09.43