கெஞ்சினாலும் வராது…
கொஞ்சினாலும் வராது…
மிரட்டினாலும் வராது…
மயக்கத்தினாலும் வராது…
கத்தினாலும் வராது…
கதறினாலும் வராது…
பேசினாலும் வராது…
பேசாவிடினும் வராது…
பார்த்தாலும் வராது…
பார்த்துக்கொண்டேயிருந்தாலும் வராது…
பார்க்காவிட்டாலும் வராது…
அது… வருவதும் தெரியாது…
அது… வந்ததுக் கூட தெரியாது…
அது… வருவதைத் தடுக்கவும் முடியாது…
அது… வருவதைத் தவிர்க்கவும் முடியாது…
அது… போவதையும் தடுக்க முடியாது…
அது… போனால் போனது தான்…
அதனைக் காக்கவும் முடியாது…
அதனைக் காப்பாற்றவும் முடியாது…
அது… சொல்லிவிட்டும் போகாது…
அது… சொல்லிவிட்டும் வராது…
அது தான் காதல்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
மார்ச் 07, 2020
காலை 09.48 மணி…