உன்னை நினைக்கயில்…
இந்த உலகை மறக்கிறேன்…
காதலில் கிறங்கையில்…
அதன் போதையில் சுற்றுகிறேன்…
நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை…
உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை…
நீயில்லாத என் வாழ்வில்…
மழையும் வெயிலும் நான் உணரவில்லை…
வெறுமையை தவிர வேறோன்றுமில்லை…
வலியின் அழகை ரசிக்கிறேன்…
வலியின் அழகு… துன்பத்தில்…
இன்பத்தின் அழகு… வெற்றியில்…
நிலவின் அழகு… மாலையில்…
சூரியனின் அழகு… காலையில்…
மழையின் அழகு… துளியில்…
இரவின் அழகு… இருளில்…
உலகின் அழகு… வேற்றுமையில்…
குடும்பத்தின் அழகு… ஒற்றுமையில்…
மயிலின் அழகு… தோகையில்…
குயிலின் அழகு… குரலில்…
உனது அழகு… உன் மனதில்…
எனது அழகு… உன் நினைவில்…
நமது அழகு… நம் காதலில்…
– உ.கா.
நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…
செப்டெம்பர் 06, 2019
மாலை 06.15