Monday, December 23, 2024
Home > கவிதை > எம் மொழியும் அழகு… அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு…

எம் மொழியும் அழகு… அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு…

ஆதிமொழி எம் மொழி…

திணிக்காதே உம் மொழி…

இல்லையேல் தேடுவோம் தனி வழி…

இனியும் வேண்டாமே இந்த அக்கப்போர்…

முயன்றால் மீண்டும் சந்திப்பீர் மொழிப்போர்…

உம் மொழியும் அழகு…

எம் மொழியும் அழகு…

அதனை நீ ஏற்றுக்கொள்ளப் பழகு…

ஆக்காதே எங்களை தனிமை…

திணிக்காதே எங்கள் மீது பகைமை…

வேற்றுமையே ஒற்றுமை…

படையெடுப்பது உம் வரலாறு…

அதனை எப்போதும் முறியடிப்பது எம் வரலாறு…

ஏன் எப்போதும் மொழியினால் இந்த தகராறு…

எதிர்த்து நிற்போம் எந்நாளும், வீழ்ந்தாலும் ஆவோம் வரலாறு…

போதும் போதும் திணித்தது போதும்…

மீறினால் போராட்டங்களும் உக்கிரமாய் மாறும்…

வீழ்வது நாமாக இருந்தாலும்…

வாழ்வது தமிழாக இருக்கட்டும்…

 உ.கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…

செப்டெம்பர் 17, 2019

காலை 09:47