Monday, December 23, 2024
Home > கவிதை > யாரடி நீ எனக்கு…

யாரடி நீ எனக்கு…

என் எண்ணங்களிலே வருகிறாய்…

என்னை புன்னனைக்க வைக்கிறாய்…

என்னருகிலே எப்போதாவது வருகிறாய்…

ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்…

என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்…

யாரடி நீ எனக்கு…

உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்…

உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்…

உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்…

யாரடி நீ எனக்கு…

உன்னிடம் பேச மனம் துடிக்கிறது…

உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது…

பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது…

உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது…

உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது…

யாரடி நீ எனக்கு…

விலகினால், அருகில் வருகிறாய்…

நெருங்கினால், விலக்கிப் போகிறாய்…

என்னை ஏனோ தவிக்க விடுகிறாய்…

அதனை, நீயும் ரசிக்கிறாய்…

யாரடி நீ எனக்கு…

நாம் ஆக வேண்டும் சொந்தம்…

நமக்கும் வேண்டும் ஒரு பந்தம்…

காதல் தானடி நம் சொந்தம்…

துவங்கட்டும் திருமணமென்றொரு பந்தம்…

கலவி நமக்கு கொடுக்கும் ஒரு சொந்தம்…

அது குடும்பம் என்ற பந்தம்…

யாரடி நீ எனக்கு…

நானடி இனி உனக்கு…

 உ.கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை…

நவம்பர் 22, 2019

மதியம் 12:47