Monday, December 23, 2024
Home > கவிதை > உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து…

உதவிகேட்ட உன்னை…

உடைகளைக் களைந்து…

உன் அனுமதியின்றி…

உன்னுடலின் உள்ளே…

ஊடுருவி விட்டார்களே…

உயிரையும் எடுத்துவிட்டார்களே…

கரிக்கட்டயாய் கிடந்தாயே…

என் நாட்டின் திருமகளே…

 

நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே…

உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே…

உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து…

உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே…

 

வீறு கொண்டு நீ வருவாய்…

அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்…

என்ற பயத்திலே…

கோழைத்தனமாய்…

உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே…

 

நல்லவர்கள் இங்கு சிலரே…

அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே…

மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே…

நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே…

நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே…

நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே…

பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே…

அநீதியிளைக்கப்பட்ட பெண்கள் இங்கு பலரே…

 

யாருக்கும் நீதி கிடைக்கவில்லை…

நீதிக்காக விடாமல் போராட இங்கு யாருமில்லை…

ஆறுதல் சொல்ல எவருக்கும் நாதியில்லை…

பாதிக்கப்பட்டவளே குற்றவாளி எனச்சொல்ல யாரும் தவறுவதில்லை…

 

எவ்வளவோ கூச்சலிட்டிருப்பாய்… உதவி கேட்டு…

எவ்வளவோ திமிறியிருப்பாய்… மானம் காக்க…

எவ்வளவோ கதறியிருப்பாய்… புணர்ச்சியின் வலியால்…

ஆனால், நாங்கள் யாரும் உன்னைக்காக்க வரவில்லையே…

ஐயோ…

மன்னிக்காதே நீ..

எங்களை என்றும் மன்னிக்காதே பிரியங்கா ரெட்டி…

 .கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை

நவம்பர் 30, 2019

மாலை 05.45…