Monday, December 23, 2024
Home > கவிதை > ஆசையாய் காத்திருக்கிறேன்…

ஆசையாய் காத்திருக்கிறேன்…

ஆசையாய் காத்திருக்கிறேன்…

என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல…

இது காதல் தானா என

தெரியவில்லை…

உன் மேல் ஏன் இந்த இனம் புரியா அன்பு என

புரியவில்லை…

இது காதலாய் மாறுமா என

உறுதியில்லை…

காதலாய் மாற வேண்டுமென்பதே எனது

ஆசை…

இது காதலே என் மனதில் தினமும் கேட்டுகுது ஒரு

ஓசை…

ஆனால்…

இது காதலாய் மாறினால்…

நமக்கு காத்திருக்கிறது பெரும் மோதல்…

அது நம் குடும்பங்களிலிருந்தே வெடிக்கும்…

சாதிகளின் கோர முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்…

நரகமாகும் நம் வாழ்க்கை…

அதனாலே சொல்லாமல் இருக்கிறேன் என் காதலை…

ஏப்படியேனும் தவிர்க்க வேண்டுகிறேன் பெரும் மோதலை…

இருப்பினும்…

என் அருகிலேயே நீ தினமும்

இருக்க இருக்க…

என் மனதும் எப்போதும் உன்னையே

நினைக்க நினைக்க…

அவ்வப்போது உன் கண்கள் என்னைப்

பார்க்க பார்க்க…

நீ என்னை பார்த்து

சிரிக்க சிரிக்க…

தினமும் சொல்லுதடி என் மனம் உன்னை

மணக்க மணக்க…

உனக்கு நான் சரியானவனா என்றறியாமல் நான்

விழிக்க விழிக்க…

உன்னை நெருங்கவும் முடியாமல்…

உன்னை விலகவும் முடியாமல்…

நான் குழம்பிக்கிடக்க…

பறிகொடுத்துவிட்டேன் என்னையே

உன்னிடம்…

உன் மனதில் எனக்குத் தருவாயா ஒரு

புகழிடம்…

கொடுப்பாயா ஒரு சமிக்கை

என்னிடம்…

ஆசையாய் காத்திருக்கிறேன் என் அன்பே…

 .கா.

நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 04, 2020

மாலை 06.45…