என் ஆரூயீர் தோழியே…
உன் மேல் நான் கோபம் கொண்டிருக்கிறேன்…
நீ எடுக்கும் கோழைத்தனமான முடிவுகளால்…
உனக்கு வரும் நல் வாய்ப்புகளை நீ வீணடிக்கிறாய்…
உன்னை விட்டு விலகியவனை மறக்க மறுக்கிறாய்…
அவனையே நினைத்து நினைத்து…
நீ கலங்காதே…
அவன் நினைவுகளால்…
நீ தடுமாறாதே….
தடுமாறினால்… நீ…
தடமாறிடுவாய்…
சற்றே சிந்தித்துப்பார் என் அருமை தோழியே…
உன் கண்ணீருக்கு அவன் ஏற்றவனா என்று…
என்றும் அவசரம் வேண்டாம் தோழியே…
அவனும், இனி உனக்கு வேண்டாம் தோழியே…
காதல் அற்புதமான ஒரு கண்ணாடி…
அது உடைந்துவிட்டால்…
அது போக வேண்டும் நம் நினைவிற்கு பின்னாடி…
உடைந்த கண்ணாடியை சேர்க்க முடியாது…
முறிந்த காதலை இணைக்க முடியாது…
இயற்கை…
உனக்கு அன்பான குடும்பத்தை உனக்கு கொடுத்திருக்கிறது…
அந்தக் குடும்பம் உனக்கு நல்லதொரு கல்வியைக் கொடுத்திருக்கிறது…
அந்தக் கல்வி உனக்கு நல்லதொரு வேலையை பெற்றுக் கொடுத்திருக்கிறது…
பழையதை என்றும் நினைக்காதே…
வலிகளை என்றும் மறக்காதே…
துளியும் என்றும் பதறாதே…
கடமையில் என்றும் விலகாதே…
வாய்ப்புகளை என்றும் மறுக்காதே…
மாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சாதே…
உனக்கு நல்ல குணமிருக்கு…
நல்லதொரு பாதை உனக்கிருக்கு…
உலகம் உனக்கு புரிந்திருக்கு…
நல்லது கெட்டது உனக்கு தெரிந்திருக்கு…
நல்ல நல்ல பல வழியிருக்கு…
தோழமையோடு நாங்கள் பலர் இருக்க…
வலிமையாய் என்றும் நீ இருக்க…
என்றும் வேண்டுகிறேன்…
உன் உற்ற தோழனாய்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
பிப்ரவரி 06, 2020
மாலை 06.15…
Thozhamaikana arumaiyana unarvu poorvamana varigal