Monday, December 23, 2024
Home > கவிதை > குடிசைவீட்டு காதலி…

குடிசைவீட்டு காதலி…

பார்க்காதே பெண்ணே…

தினமும் என்னை…

என்னைப் பார்த்து தாழ்த்திக்கொள்ளாதே உன்னை…

நான் தெருவோரக்காரன்…

நானல்ல உனது நாயகன்…

 

இப்போது உனக்காவது இருக்குதம்மா குடிசை…

என்னைத் தேடி வந்தால் உனக்குதனம்மா இம்சை…

நஷ்டம் கண்டேன் தொழிலில்…

நலிந்துவிட்டேன் உடலளவில்…

மொத்தமும் இழந்துவிட்டேன் கடைசியில்…

இப்போது நிற்கிறேன் நடுத்தெருவில்…

கட்டிக்கொண்டவளும் வெட்டிக்கொண்டுவிட்டாள் பாதியில்…

தளர்ந்துவிட்டேன் மனதளவில்…

இருண்டே விட்டது உலகம் எனக்கு…

நட்புக்கூட்டமும் தள்ளிவைத்தது…

சொந்த பந்தமும் விட்டுச் சென்றது…

 

இவையெல்லாம் தெரியும் உனக்கு…

இருந்தும்…

என்னைப் பார்த்தால்…

உன் கண்களில் தெரியுது வெட்கம்…

உன் முகத்தில் தெரியுது மலர்ச்சி…

உன் உதடுகளில் தெரியுது ரம்மியமான ஒரு சிரிப்பு….

இவையாவும் எனக்குக் கொடுக்குது பெரும் துக்கம்…

 

குடிசையாவது இருக்குதம்மா உனக்கு…

என்னதான் இருக்குதம்மா எனக்கு…

என்ன நினைத்தாலும் செய்ய முடியும் உன்னால்…

எதையும் நினைக்க மட்டுமே முடியும் என்னால்…

 

நீ இருப்பது குடிசையானாலும்…

இனி, அது என் நினைவொறா கனவு மாளிகை…

அவ்வளவு தான் என் பிழைப்பு…

 

உனக்கு கிடைப்பான் நல்ல நாயகன்…

உனக்கு வேண்டாவே வேண்டாம் இந்த தோற்றவன்…

என்னைத் தேடி நீ வர…

நான் வல்லவனுமல்ல…

உன்னை வைத்துக் காப்பாற்ற…

நான் செல்வம் கொண்டவனுமல்ல…

என் மேல் நீ கொண்ட மோகம்…

அது தரும் உன் பெற்றவருக்கு கோபம்…

வேண்டாமடி நான் உனக்கு…

உன் நினைவே போதுமடி இனி எனக்கு…

படித்திருந்தாலும் உன்னை…

நீ துறந்திடு என்னை…

என்றும் என் மனதில் நிறைந்திருப்பாய்…

நான் ஆசைப்படாத…

குடிசைவிட்டுக் காதலியாய்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 06, 2020

காலை 11.00 மணி…