Monday, December 23, 2024
Home > கவிதை > தெருவோரக் காதலா…

தெருவோரக் காதலா…

என் தெருவோரக் காதலா…

நீ தான் இனி எனக்கு உலகம்…

நீ கொஞ்சம் சரிந்துதான் விட்டாய் என் கண்ணா…

நீ தோற்கவில்லையே என் மன்னா…

நான் இருப்பேன் இனி உன் பின்னால்…

வெற்றிகள் குவியும் இனி உன் முன்னால்…

 

மாட மாளிகையின் நாயகன் வேண்டாம்…

என் மனதை வென்ற நாயகனே நீ மட்டுமே வேண்டும்…

எனக்கு…

என் இணையாய்…

என் உயிராய்…

என் துணையாய்…

 

உன்னை நினைத்தாலே அது எனக்கு திருவிழா…

அதில், நீ இருக்கிறாய்… தேரின் நடுவிலே…

நமக்கு எப்போது நடக்கும் மணவிழா…

அப்போது முதல் நீ இருப்பாய் எந்தன் அருகிலே…

காத்திருக்கிறேன் உனக்காக…

நீ வருவாய் எனக்காக…

என்னை உனதாக்க…

என் மன்னவனே…

நீ வெல்வாய் உலகை…

உன்னைத் தேடி வரும் பல கோடி…

நட்புக்கூட்டமும் தேடி வரும் உன்னைத் தேடி…

சொந்தமும் பந்தமும் மீண்டும் உன்னைப் போற்றும்…

மீண்டு வந்த உன்னை இந்த ஊறே வாழ்த்தும்…

அப்போதும் இருப்பேன்… உனக்காக…

இப்போதும் இருக்கிறேன்… உனக்காக…

எப்போதும் இருப்பேன்… உனக்காக…

சீக்கிரம் வெல்வாய் என் மன்னாவா…

என் ஆருயீர் காதலா…

என்னைக் கட்டிக்கொள்ள வாடா…

என் தெருவோரக் காதலா…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 09, 2020

காலை 11.17 மணி…