அவள் யார் என்று தெரியாது…
அங்கு, நான் தேடி வந்தவனும் கிடையாது…
அவள், மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்…
கண்களில் கண்ணீருடன்…
அவளருகில் நான் சென்றேன்…
என்னை கண்டுகொண்டவள், அழுதாள், இன்னும் கனமாக…
என் மனம் வாடியது, இதைக் கண்டு…
அவள் அருகில் சென்றமர்ந்தேன்…
அழுகை வேண்டாம் பெண்ணே என்றேன்…
எதற்கும் கலங்காதே…
அச்சம் தவிர் பெண்ணே என்றேன்…
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்…
மீண்டு வா கண்ணே என்றேன்…
சொல்லி முடிப்பதற்குள்…
என் மடியிலே சாய்ந்து அழுதாள்…
என் கண்களும் கலங்கியது…
அடக்கிக்கொண்டேன் நான் கண்ணீரை…
ஆறுதலாய் இருந்திருக்கும்… அது அவளுக்கு…
என் மடியிலே படுத்து அழுதாள்… சில நிமிடங்களுக்கு…
எழுந்தாள்…
கண்ணைத் துடைத்துக்கொண்டாள்…
என்னைப் பார்த்து புன்னகைத்தாள்…
ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டாள்…
தூரமாய் சென்றதும்…
மீண்டும் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்…
அப்படியே மக்கள் வெள்ளத்திலே கலந்தாள்…
என் மனதிலே ஆழமாய் பதிந்தது… அந்தப் புன்னகை…
அவள் நினைவாகவே பல நாட்கள் கழித்தேன்…
ஊரெல்லாம் அலைந்தேன்…
அவளைத்தேடி…
ஆனால்…
அவளை நான் மீண்டும் பார்க்கவேயில்லை…
இன்னும் என் மனதில் நினைவிருக்கிறாள்…
யாரோ…
அவள் யாரோ…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
பிப்ரவரி 10, 2020
காலை 09.47 மணி…