Monday, December 23, 2024
Home > கவிதை > தினமும் காதலில்…

தினமும் காதலில்…

என் உறவே…

நிலவின் அழகே…

என்னுயிரின் கருவே…

நிலவைப் போல என்னருகில் வருகிறாய்…

என்னைக் கண்டதும் பெளர்ணமியாய் மிளிர்கிறாய்…

நானில்லா நாட்களில் அமாவாசையாய் இருண்டுப்போகிறாய்…

 

வியக்கிறேனடி…

உன் சூரியனா??? நான் என்று….

அருகில் வர வர மிளிர்கிறாய்…

விலக விலக இருள்கிறாய்…

உணர்கிறேனடி நான்…

எந்தன் நிலவு நீயடி என்று…

 

நாம் படும்பாடு…

எல்லாம் காதலில் வெளிப்பாடு…

உந்தன் சூரியனாய் நான் வருவேன்…

எந்தன் நிலவாய் நீ வருவாய்…

அதுவரை காத்திரு பெண்ணே…

அமாவாசையில் ஊடலும்…

பெளர்ணமியில் கூடலும்…

கொள்வோமடி…

 

காதலே நம் சக்தி…

சீக்கிரம் வகுக்கிறேன் ஒரு யுக்தி…

அதுவரை…

திளைத்திருப்போம்…

தினமும் காதலில்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 10, 2020

காலை 10.29 மணி…