“நான் எங்கயாவது போறான். என்ன கொஞ்ச தனியா விடுங்கமா” என்று அம்மாவிடம் கத்திவிட்டு எனது சிவப்பு யமஹா ஆர்.எக்ஸ் 135ஐ எடுத்துக்கொண்டு ரெட்டப்பாலத்திற்கு செல்ல நினைத்தேன்.
அதற்குள்,“ராஜேஸ். உன் தம்பி எங்கேயே வண்டி எடுத்துட்டுப்போறான் பாருடா” என்று அம்மா அண்ணனை அழைத்தாள்.
அதற்குள் நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன்.
நேற்றும், இன்றும் என் வீட்டில் நடந்த களபேரங்களால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த இரண்டு நாட்கள். எனக்கு தனிமை தேவைப்பட்டது. என் நண்பர்களையும் இந்த நேரத்தில் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால் தான் தனியே சென்றேன்.
நான் அந்த இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தைத் தாண்டி சென்றிருந்தது. தூரத்தில் நான் வந்துக்கொண்டு இருந்தபோது தான் அந்த ரயில் ரெட்டப்பாலத்தைக் கடந்தது. அடுத்த ரயில் வருவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.
நட்ட நடு இராத்திரியில் வீட்டைவிட்டு கோவித்துக்கொண்டு வந்துவிட்டேன். என் வாழ்க்கையே இருண்டு போனது மாதிரி எனக்கு தோன்றியது. எங்கயாவது தனியாக கொஞ்ச நேரம் போய் இருக்கலாம் என்று ரெட்டப்பாலத்திற்கு வந்தேன்.
என் நண்பர்கள் குமார், தயா மற்றும் கோபியுடன் அடிக்கடி வந்து இந்தப் பாலத்திற்கு வந்திருக்கிறேன். என் சொந்த ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இந்தப்பாலம் இருக்கிறது. மாலையில் நேரங்களில் இந்த ரெட்டப்பாலத்தில் அமர்ந்து ஏதாவது ஊர் நியாயம் பேசிக்கொண்டிருப்பது எங்களுக்கு பெரும் பொழுதுபோக்கு.
நாங்கள், ஆளுக்கு ஒரு தொழில் செய்து வந்தாலும், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மாலை 7 மணிக்கு எல்லாம் இங்கே வந்து சேர்ந்திடுவோம். தயா தான், எங்களை எப்போதும், ஒருங்கிணைப்பான். யாராவது ஒருவர் வரவில்லை என்றாலும் அந்த சந்திப்பு அன்றைக்கு ரத்தாகிவிடும். சுவரஸ்யமான விசயங்களைப் பேசும் போது இரவு 11-12 வரைக்கூட அங்கே அமர்ந்துப் பேசிக்கொண்டிருப்போம்.
அமைதியான அந்த இரவு சற்றே எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கு சற்றே களைப்பாக இருந்ததால், ஆள் நடமாட்டமில்லாத இந்த நேரத்தில் இந்த இரயில் தண்டவளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தேன். படுத்த சில நிமிடங்களில் நான் தூங்கியிருந்தேன்.
ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசைக் கேட்டது. ரயில் இஞ்சினின் ஒளி சன்னமாய் தெரிந்தது.
இரயில் வருவதற்குள் எழ முயற்சி செய்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எழ முடியவில்லை. ரயில் என்னருகில் வந்துவிட்டது. இன்னும் சில நூறு அடிகள் தான். அதற்குள் எழுந்தாக வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தேன். ஏனோ என்னால் எழ முடியவில்லை.
எழ முடியவில்லையா? எழ விரும்பவில்லையா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ரயில் டிரைவர் ஹாரன் அடிக்கும் சத்தும் என் காதுக்கு கேட்டது. மீண்டும் எழ முயற்சி செய்தேன்.
முடியவில்லை.
யாரும் என்னைக் கட்டிப்போட்டி இருக்கவுமில்லை. எவ்வளவு முயன்றும் என்னால் எழ முடியவில்லை.
அதற்கு ரயில் என்னருகில் வந்துவிட்டது. இன்னும் சில நொடிகள் தான். மீண்டுமொரு முறை முயன்றுப் பார்த்தேன். முடியவில்லை. இனி அவ்வளது தான் என நினைப்பதற்குள்…
இரயில் என் மீது ஏறி என் உடலும் தலையும் தனித்தனியாகத் துண்டானது…
அதற்குள்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 9.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு
??Next