Monday, December 23, 2024
Home > கவிதை > கனவிலாவது உன்னுடன் வாழ்கிறேன்…

கனவிலாவது உன்னுடன் வாழ்கிறேன்…

நீ என் காதலியுமல்ல…

நான் உந்தன் காதலனுமல்ல…

நான் உனக்கேற்ற அழகனுமல்ல…

நீ எனக்கேற்ற அழகியுமல்ல…

என்னை நிராகரிப்பதில் நீ முதலானவள் அல்ல…

நான் ஏமாந்து போவது புதிதுமல்ல…

ஏன் உன்னை பிடிக்கும் என்று தெரியாது…

அவ்வப்போது ஏன் என் மனம் உன்னை ஒதுக்கும் என தெரியாது…

என் முகத்தில் இருக்கிறாய் சிரிப்பாய்…

என் துன்பத்திலும் இருக்கிறாய் ஆறுதலாய்…

என் சிரிப்பு அழகானது தான்…

ஆனால்…

அதனைவிட அழகானது உந்தன் கோபம்…

அந்த அழகை ரசிக்கவே உன்னை சீண்ட நினைக்கிறேன்

ஒவ்வொரு நொடியும்…

கோபத்திலிருக்கும் உன்னை கட்டியனைக்க துடிக்கிறேன்

அனுதினமும்…

தினமும் ஆயிரம் முறையாவது உன்னிடம் சண்டையிட ஆசை…

ஆயிரத்தி ஒரு முறையாவது மன்னிக்க வேண்டி மன்றாடவும் ஆசை…

நிஜத்தில் தான் உன்னுடன் வாழ முடியவில்லை…

கனவிலாவது உன்னுடன் வாழ்கிறேன்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 15, 2020

மாலை 05.20 மணி…