Monday, December 23, 2024
Home > கவிதை > விலகிச் செல்லும் பெண்ணை…

விலகிச் செல்லும் பெண்ணை…

தட்டிக்கொடுப்பது ஆண்மையின் அழகு…

விட்டுக்கொடுப்பது பெண்மையின் அழகு…

கோபம் ஆண்மையின் அழகு…

மெண்மை பெண்மையின் அழகு…

சிரிப்போ ஆயுதம் ஆணுக்கு…

அழுகையே ஆயுதம் பெண்ணுக்கு…

காத்திருப்பது ஆணுக்கு அழகு…

காக்க வைப்பது பெண்ணுக்கு அழகு…

தேடிப்போவது ஆணின் அழகு…

தேடிவர வைப்பது பெண்ணின் அழகு…

கடமையை செய்வது ஆணுக்கு  அழகு…

கடமையை உணரச்செய்வது பெண்ணிற்கு அழகு…

ஆசையை அடக்க முடியாது ஆணால்…

ஆசையை தூண்ட முடியும் பெண்ணால்…

ஐந்து நிமிடமே இன்பம் ஆணுக்கு…

அளவில்லாத இன்பம் பெண்ணிற்கு…

ஒவ்வொரு பெண்ணிலும் தாயில் பாசத்தை தேடுது ஆண் மனம்…

ஒவ்வொரு ஆணிலும் தந்தையின் அரவனைப்பை  தேடுது பெண் மனம்..

தோற்ற காதலை மறக்கவே முடியாது ஆணுக்கு…

கிடைத்த காதலை மறுக்க முடியாது பெண்ணுக்கு…

தன்னைத் தேடி வந்த ஆணையும்…

தள்ளி வைப்பதே பெண்மை…

தன்னைவிட்டு விலகிச் செல்லும் பெண்ணைவிட்டு…

தள்ளி நிற்பதே ஆண்மை…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 15, 2020

மாலை 05.17 மணி…