Monday, December 23, 2024
Home > கவிதை > அவளையே நினைத்து நினைத்து

அவளையே நினைத்து நினைத்து

காதலில் தோற்பது எனக்கு புதிதல்ல…

என்னை வேண்டாம் என்று சொல்லாத பெண்ணல்ல…

காதலியை மறப்பது எளிதல்ல…

புதிய காதலையை தேடுவதும் கஷ்டமுமல்ல…

காதல் அவிழ்க முடியாத புதிருமல்ல…

பெண்களின் மனம் கல்லுமல்ல…

காத்திருப்பதைத் தவிர வேறுவழியுமல்ல…

பெண்ணின் பதிலுக்காக காத்திருப்பதைப் போன்ற சுகமுமல்ல…

 

அவளும் இன்னும் காத்திருந்தாள் திருமணத்திற்கு…

இதுவரை மாப்பிள்ளையே கிடைக்கவில்லை அவளுக்கு…

அவளை ஏனோ பிடித்திருந்தது என் உள்ளத்திற்கு…

இன்னும் ஒரு நாளே இருந்தது காதலர் தினத்திற்கு…

காதலை அன்றே சொல்லலாம் என்று தோன்றியது மனதிற்கு…

எழுதினேன் ஒரு காதல் கடிதம் அவளுக்கு…

வாங்கினேன் ஒரு சிவப்பு ரோசா அவளுக்கு…

அதனை கொடுக்க பயமிருந்தது என மனசிற்கு…

 

அன்று சீக்கிரம் வரச் சொன்னேன் அவளிடம்…

நாங்கள் எப்போதும் காபி குடிக்கும் கடையிடம்…

அவளுக்காக வந்து காத்திருந்தேன்…

அவள் வருவதாய் சொன்ன நேரமும் தாண்டியது…

என் மேலாளர் என்னை அலுவலாய் அழைக்க…

அதனை என்னால் தவிர்க்க முடியாமல் இருக்க…

உசுறை அங்கே விட்டு…

கிளம்பினேன் அந்த இடத்தை விட்டு…

கடிதத்தை நேரடியாக கொடுக்க முடியவில்லை அவளிடம்…

 

ஆனால்…

சட்டென்று மனதில் ஒரு எண்ணம் பிறக்க…

எப்படி கடிதத்தை அவளிடம் கொடுக்க…

காபிக் கடையின் வேலையாளை பிடிக்க…

கேட்டேன் அவளிடன் கடிதத்தை சேர்க்க…

பிரச்சனை வந்தால் என்று அவன் பயந்து ஒதுங்க…

அவன் கையில் ஐநூறை திணிக்க…

அவளிடம் கொடுப்பதாய் சொல்லி வாங்கிக் கொண்டான் கடிதத்தை…

 

காரியம் முடிந்தது எளிதில்…

துள்ளி குதித்தேன் மனதில்…

வெட்கம் வந்தது முகத்தில்…

அடக்கிக் கொண்டேன் நடுக்கத்தில்…

அவளுக்காக ஒரு காபி கடையில் காத்திருக்கிறது ஒரு ஆச்சரியம்

என்று அவளிடன் சொன்னேன் வாட்ஸ் ஆப் செய்தியில்…

என்னவென்று பார்க்க ஆர்வமாய் இருப்பதாய் சொன்னாள் வாட்ஸ் ஆபின் பதிலில்…

 

நான் கிளம்பிய பின் வந்தாள் காபி கடையிற்கு…

நான் கொடுத்த ஐநூறு, கடிதத்தை கொண்டு சேர்த்தது அவளுக்கு…

வாங்கியவுடன், அது காதல் கடிதம் எனத் அவளுக்கு தெரிந்திருக்கு…

யார் எழுதிய காதல் கடிதமென்று பார்த்தாள்…

கடைசி பக்கத்தில் எழுதியிருந்தேன் என் பெயரை…

அதற்கு மேல் படிக்காமல்…

கடிததை அங்கேயே வைத்துவிட்டாள்…

அங்கிருந்து, ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்…

 

எனக்கு அனுப்பினாள் ஒரு செய்தி…

அதில்…

என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது…

மன்னித்துக்கொள் என்னை…

காதலனாய் என்றைக்குமே நினைக்கவில்லை உன்னை…

இப்படி நினைத்துவிட்டாயே என்னை…

இனி நான் என்ன செய்வது உன்னை…

அழ வைத்துவிட்டாயே என்னை…

மன்னிக்க மாட்டேன் உன்னை…

யாருக்காவது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்னை…

யாரிடமும் காட்டிக்கொடுக்க மாட்டேன் உன்னை…

என்று வந்தது அந்த பதிலில்…

உடைந்து போய்விட்டேன் ஒரு நொடியில்…

 

கண் கலங்கியது…

உடல் நடுங்கியது…

இதயம் வேகமாய் துடித்தது…

உயிர் நாடியெல்லாம் அடங்கியது…

என் குரல் மெளனமானது…

 

மீண்டும் அவளைப் பார்க்க துணிந்தேன்…

இரண்டு நாளாய் காத்திருந்தேன்…

காபி கடைக்கே அவள் வரவில்லை…

அவள் அங்கே வர வேண்டும் என தவமிருந்தேன்…

 

வந்தாள் மூன்றாம் நாள்…

என் மேலுள்ள கோபத்தைக் காட்டாமல்…

என்னருகில் டேபிளில் வைத்தாள் அவள் அலைபேசியை…

சில நிமிடங்களில் வருவதாய் சொல்லிவிட்டுச் சென்றாள்…

அதில் வந்தது ஒரு அழைப்பு…

அவள் அருகில் இல்லாத தருணத்தில்…

நான் அதனை எடுப்பதற்குள்…

அது மிஸ்டு கால் ஆனது…

அவளது அலைப்பேசியில் புது போட்டோ தெரிந்தது…

அருகில் எடுத்துப் பார்த்தேன்…

 

அதில் அவள்…

ஒருவன் மீது சாய்ந்து போஸ் கொடுத்திருந்தாள்…

இருவர் கழுத்திலும் மாலை…

அந்த போட்டோவிலே அவள் தலையிற்கு பின்னால்

எழுதியிருந்தது…

நிச்சய தார்த்த விழா என்று…

அதிர்ச்சியில் உறைந்தேன்…

தூரத்தில் வந்த அவளிடன் காட்டிக் கொள்ளவில்லை…

என் ஏமாற்றத்தை…

காதலை வெள்ளியன்று தானே சொன்னேன் அவளிடன்…

இன்று திங்கள் தானே…

எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தேன்…

 

அவளே சொன்னாள் என்னிடம்…

சனிக்கிழமையே அமைந்ததாம் சம்பந்தம்…

ஞாயிறே வைத்துக் கொண்டார்களாம் நிச்சயம்…

அவள் கையை காட்டினால், அதில் புது மோதிரம்…

அடுத்த மாதம் பிறக்கப்போகுதாம் சீக்கிரம்…

அதனால் வரும் ஞாயிறு அன்றே அவளுக்கு கல்யாணமாம்…

 

அங்கேயே செத்துவிட்டேன்…

நாற்காலியிலிருந்து விழந்தேன் கீழே…

உயிரில்லாமல்…

 

கத்தினேன் ஐயோ அம்மா என்று…

நான் விழுந்தது கட்டிலில்லிருந்து…

அப்போது தான் தெரிந்தது…

எனக்கு வந்தது கனவென்று…

முதன் முறை வந்திருக்கிறாள் என் கனவில்…

தூக்கம் கலைந்தது…

முகத்தில் புன்னகை மலர்ந்தது…

அறையைவிட்டு வெளியே வந்தேன்…

நிலவின் ஒளியில்…

நிலவைப் பார்த்து சிரித்தேன்…

 

எடுத்தேன் கணினியை…

கொட்டியது வார்த்தை…

அடித்தேன் தமிழில்…

பிறந்தது கவிதை…

அதனை அலுங்காமல், குலுங்காமல்

கொடுக்கிறேன் உங்களிடம்…

படிக்க…

 

மனதெல்லாம் அவள் தான்…

ஆனால்,

என் காதலைத்தான்…

அவள் அன்றே நிராகரித்துவிட்டாளே…

 

யாரிடம் சொல்லி அழுது புலம்பட்டும்…

நான் அவள் மேல் கொண்ட காதலை…

அவளை காதலிக்க முயன்றேன்…

அது முடியாமல் தோற்றேன்…

இப்போது கலங்கி நிற்கிறேன்…

தூக்கமின்றி தவிக்கிறேன்…

பைத்தியம் போல சிரிக்கிறேன்…

எப்போதும் அவளையே நினைத்து நினைத்து…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 17, 2020

அதிகாலை 02.19 மணி…