பதினைந்தாவது பகுதியின் லிங்க்…
ஆனால், அதற்குள் நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்தது. மீண்டும் அவனைப் பார்த்தேன். அவன் வேறு எங்கயோ பார்த்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களாவது அவனை நான் அப்போது சைட் அடித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவன் என்னைப் பார்க்க மாட்டான என என் மனம் ஏங்கியது. அப்போது எனக்கும் ஒரு விதமான ரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு இதுக்கும் முன் அது போன்று ஏற்பட்டதில்லை.
நான் இறங்குவதற்குள் என்னைத் திரும்பிப் பாரடா என் அவனை நோக்கி நான் வேண்டிக் கொண்டிருந்தேன். அவன் திரும்பிப் பார்ப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையிழந்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பெண் ஒன்றை அடைய நினைத்திவிட்டால் அல்லது செய்ய நினைத்திவிட்டால் என்றாள். அந்தப் பெண் எப்பாடு பட்டாவது அதை அடைந்துவிடுவாள் அல்லது செய்து முடித்துவிடுவாள். பெரும்பாலான பெண்கள் இப்படித்தான். நானும் அப்படித்தான். அவனை எப்படி என்னைப் பார்க்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இல்லையில்லை வெறியாகிக் கொண்டிருந்தேன். ஏனோ அவன் என்னைப் பார்பதாய் தெரியவில்லை.
நான் இறங்கும் இரயில் நிலையத்தை இரயில் அடைந்தது. நான் இங்கே இறங்கலாமா? அல்லது அவனை யார் என்று ஹார்ட் பீட் வேகமாக துடித்தது.
அந்த நொடியில் ஒரு மேஜிக் நடந்தது.
அப்போது ராபின் என் நினைவில் வந்துவிட்டுப் போனான். அவன் கொடுத்த வலியும் கூடவே நியாபகத்திற்கு வந்துவிட்டு போனது. நான் இரயில் விட்டு இறங்க ஆயத்தாமானேன். மீண்டும் அவன் என்னைப் பார்க்கிறானா? என்றுப் பார்த்தேன்.
மின்னலைப் போல என் மனம் ஓங்கி ஒலித்தது.
“ச்சீ. என்னடி செஞ்சிக்கிட்டு இருக்க? அவன் உன்ன விட்டுட்டு போயி ஒரு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள உனக்கு இன்னொருத்தான் துணைக் கேக்குதா. ஆம்பள துணையில்லாம வாழ முடியாத அளவுக்கு ஆயிட்டயா? இழுத்து மூடிக்கிட்டு இரயிலை விட்டு கீழ இறங்குடி. அவன் யாரா இருந்தா உனக்கு என்ன” என்று என் உள் மனம் எனக்கு பளீர் எனச் சொல்லியது.
நான் அவனைப் பார்த்துக்கொண்டே இரயிலை விட்டு இறங்கினேன். அப்போது அவன் என்னைப் பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன்.
நாம் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நபர் நம்மைப் பார்த்தாலே ஏற்படும் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. ஏனோ அவ்வளவு சோகத்திலும் எனக்குள் குதூகலம் பிறந்தது. ஒரு பெண்ணுக்கு இருப்பதிலேயே வெட்கமான தருணம், தான் மனதுக்கு விருப்பமான ஆண் தன்னைப் பார்ப்பது. அப்படி மட்டும் ஒரு பெண்ணின் மனதிற்கு பிடித்த ஆண் அவளைப் பார்த்துவிட்டால், அவ்வளது தான் அவள் இருந்த இடத்திலிருந்தே பறக்க ஆரம்பித்துவிடுவாள்.
இன்று நானும் அப்படித் தான் அந்தரத்தில் பறந்துக் கொண்டிருந்தேன். எனக்கு தலைக்கால் புரியவில்லை, என் மூளை எவ்வளவோ சொல்லியது இது மடத்தனம் என்று, ஆனால் என் மனம் ஏனோ கேட்கவேயில்லை.
கடந்த முப்பது நாள் சோகம் என் மனதை விட்டு விலகியிருந்தது. என் மனதில் புன்னகையை கொண்டு வந்ததற்காகவே அவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது, அதற்காகவே அவனுடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
நான் இரயிலை விட்டு இறங்கியவுடன் அவன் என்னைப் பார்க்கிறானா என்று பார்த்தேன்.
அவன் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
மீண்டும் சிரித்தேன். இன்று நமக்கு நல்ல நாளாக அமையப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
என் போன் அடித்தது. தாத்தா அழைத்திருந்தார். நான் எடுக்கவில்லை. இரயிலையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் போன் அடித்தது. இம்முறை ஹெச்.ஆர் அழைத்திருந்தார். மீண்டும் நான் எடுக்கவில்லை.
இரயில் கிளம்பியது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கண்கள் என்னிடம் ஏதோ பேசியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் என்னவென்று புரியவில்லை. இருந்தாலும் அந்த உணர்வு எனக்குப் பிடித்திருந்தது.
மீண்டும் போன் அடித்தது.
மீண்டும் ஹெச்.ஆர் தான்.
இரயில் வேகமெடுத்தது.
அதுவரை அமைதியாய் இருந்த உறைந்துப் போயிருந்த மும்பை மீண்டும் விழித்துக்கொண்டதைப் போன்ற உணர்வு எழுந்தது.
“ஹலோ. குட் மார்னிங் சார்.” என்று போனை எடுத்து காதில் வைத்தேன்.
அப்போது இரயில் நான் வந்த அந்த ரயில் அந்த இரயில் நிலையத்தை விட்டு வெகு தூரம் சென்றிருந்தது. ஒரு புள்ளியாய் தெரிந்து மறைந்துப் போனது. அதுவரை போனில் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதிலே கவனமில்லை. மனம் முழுவதும் அவன் நினைவே என்னை ஆட் கொண்டிருந்தது.
“ஆர் யூ தேர் இன் த லைன்” என்று போனில் ஹெச்.ஆர் கேட்டார்.
“யேஸ். சார். ஐ யாம்” என்றேன்.
அப்போது…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு