எனது இனையதளம் துவங்க ஊந்துதலாய் இருந்தவர்கள்.
முதல் ஏழு நபர்கள் எழுத்தாளர்களாக, வலைப்பதிவுலகில், பதிப்புலகில், பத்திரிக்கை துறையில் தனி இடம் பிடித்தவர்கள். இருவர் நான் படித்த கல்லூரியின் துணை பேராசிரியர்கள். கடைசியாக இருப்பவள், கல்லூரியில் என்னுடன் படித்தவள்.
- வா. மணிகண்டன்
- கேபிள்சங்கர்
- சாரு நிவேதிதா
- ஜெயமோகன்
- எஸ். இராமகிருஷ்ணன்
- சா. மாடசாமி
- சமஸ்
- பாலசந்திர் காளியப்பன் – என் ஆசான்
- ரியாஸ் அகமத் – என் ஆசான்
- தி.பா. – என் தோழி
இவர்களைத் தவிர பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். பல புத்தகங்களை படித்துவிட்டு உறங்க முடியாமல் தவித்திருக்கிறேன். பலரிடம் அவற்றை விவாதித்திருக்கிறேன். என் உணர்ச்சிகளுக்கு வடிகால் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருந்தபொழுது வலைப் பக்க வாயிலாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எனக்கு வழிகாட்டியவர்கள் தான் மேலே உள்ளவர்கள்.
இன்று வரையில் என் வலை பக்கத்தை படிக்க போகிறவர்கள்(Target Audience) யார் என்று தெரியாது. என் வலை பக்கத்தை ஏன் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. என்னைவிட ஆழமாக கருத்துக்களை எழுதவும், விவாதிக்கவும் நாட்டில் பலர் இருக்கையில் என் எழுத்துக்கள் ஒன்றும் பெரிதாக மாற்றம் கொண்டு வரவோ, விவாத பொருளாகவே மாறப் போவதுதில்லை. என் எழுத்து நடை சரளமானதாக இராது, எளிமையாக நிச்சயம் இராது, பல கருத்துப் பிழைகளுடன், மிக எளிய கருத்துக்களை அதிகுழப்பமான நாட்டுப்புறத் தனமாகத்தான் இருக்கப்போகிறது.
தமிழ் இலக்கிய மரபு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தான் என் தமிழறிவு. தமிழ் மொழியையே ஆங்கில கலப்போடு பறிமாறும் ஆங்கில கல்வி வாயிலாக வழிவந்தவன் நான். என் எழுத்துக்களில் எண்ணற்ற சிறு சிறு பிழைகளை எப்படி சரி செய்வது என்று தெரியாது. இவ்வளவு இருந்தும் நான் ஏன் வலைப்பக்கம் துவங்கி எழுத முயற்சிக்கிறேன்.?
ஏன்? ஏதற்கு? எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு கீழ்லிருப்பவை பதிலாகலாம்.
- எனக்குள் எழுகின்ற நியாமான பல கேள்விகளுக்கு விடைதேடவே எழுத உத்தேசித்துள்ளேன்.
- என்னை வளர்த்த என் சமுதாயத்தை பதிவு செய்வது மிகமிக முக்கியம் என கருதுகிறேன்.
- முகநூல், டிவிட்டர், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் பதிவிட்டால் அது பதிவிட்டவுடன் அவர்களுக்கே சொந்தமாகிவிடுகிறது. வேண்டுமானால் என் இனையத்தின் பதிவுகளை அதில் பகிரலாம்.
- என் நியாயமான கோபத்தினை வெளிப்படுத்த எனக்கான ஒரு பொதுமேடையாய், என் தளம், எனக்கு இருக்கும்.
- முகம் தெரியாமல், சுயத்தினை இழக்காமல், என்னை தெரியாதவர்கள் கூட எளிதாய் அனுக, விவாதிக்க, பகிர, ஒரு கருத்தினை வார்த்தேடுக்க வலைப்பக்கமே எனக்கு சரியாய் இருக்கும் எனக் கருதுவதனால், பட்டிக்காடு தளத்தினை உருவாக்கியுள்ளேன்.
ஆக. ஆழம் தெரியாமல் காலை விட முடிவு செய்துவிட்டேன். மேலே உள்ளவர்கள் எழுதி குவித்ததில் ஒரு சதவிதமாவது உருப்படியாக எழுத வேண்டும் என்பதே என் இலக்கு.
-விரைவில் விவரமாய்…