அன்று தான் முதன் முதலில் அந்த எண்ணம்
தோன்றியது என் உள்ளத்தில் மின்னலைப் போல…
என் மனமும் அந்த எண்ணத்தை சரியெனச் சொன்னது…
அடுத்த சில தினங்களில் வந்தது…
காதலர் தினம்…
அன்றே சொல்லிவிட்டே உன்னிடம்…
என் காதலை…
உன் முடிவையும் சொல்லிவிட்டாய்…
உன் மறுப்பையும் பதிவுசெய்துவிட்டாய்…
என்னிடம்…
மூன்று வருடம் பழக்கம் நமக்கு…
நான் தேடிச்சென்றவளும் என்னைக் கைவிட்டாள்…
என்னை நாடி வந்தவளும் என்னை உதறிவிட்டாள்…
இவை எல்லாம் தெரியும் தானே உனக்கு…
அப்போதும் கூட நான் உன்னிடம் அறுதல் தேடவில்லையே…
என் கண்ணே…
உன்னுடன் எனக்குத் தனிமையில் கிடைக்காத நாட்களா?
அதில் என்றாவது ஒரு நாளாவது வரம்பைத் தான் நான் மீறி இருக்கிறேனா?
உன் மூச்சுக் காற்றும் என் மேல் படும் அளவிற்கு நட்பாய் என்னுடம் நீ
நெருங்கி வந்திருக்கிறாய்…
அப்போது நான் தள்ளி தள்ளி தானே நின்று இருக்கிறேன் உன்னைவிட்டு?
அப்போது கூட நான் உன்னை தவறான எண்ணத்தில் பார்க்கவில்லையே…
இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும்…
என்றாவது நான் உன்னிடம் வரம்பு மீறி பேசியதுண்டா?
இல்லை… வரம்பு மீறி பேச உனக்கு வாய்ப்புக் கொடுத்ததுமுண்டா?
என்னருகிலேயே பல வருடங்களாய் இருக்கிறாய்…
நான் என்றாவது ஒரு நாளாவது, தேவையில்லாமல் உன்னைப் பார்த்ததாவதுண்டா?
இல்லை… தேவையேயில்லாமல் உன்னிடம் பேசியதாவதுண்டா?
எப்போதும் நீ… நீயாகவே இருந்தாய்…
எப்போதும் நான்… நானாகவே இருந்தேன்…
இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்…
எப்படி நீ என் மனதிற்குள் வந்தாய் என்று…
இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்…
நான் ஏன் உன்னிடம் உன்மேலுள்ள காதலை சொன்னேன் என்று…
இன்னும் இன்னும் வியக்கிறேன்…
ஏன் உன் மேல் இந்தக் காதல் என்று…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
பிப்ரவரி 24, 2020
காலை 06:44 மணி…