உன்னைப் பற்றி என்னத் தெரியும் எனக்கு…
என்று நீ கேட்கிறாய்…
உன் கேள்வியில் உண்மை உள்ளதடி என் கண்ணே…
உன் பெயரைத் தவிர என்னத் தெரியும் எனக்கு?
உன் பிறந்த நாளும் தெரியாது…
நீ பிறந்த ஊரும் தெரியாது…
உன் பெற்றவர் பெயரும் தெரியாது…
உன்னுடம் பிறந்தவன் பெயரும் தெரியாது…
உன் முகவரியும் எனக்குத் தெரியாது…
நீ என்ன சாதி என்றும் தெரியாது…
உன் வீடு சொந்த வீடா என்பதும் தெரியாது…
உன் சொத்துபத்தும் எனக்குத் தெரியாது…
உன் தாய்மொழி என்னவென்றும் தெரியாது…
உன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதும் தெரியாது…
நீ படித்த பள்ளியும் தெரியாது…
நீ வளர்ந்து படித்த கல்லூரியும் தெரியாது…
உன் பூர்வீகமும் தெரியாது…
உன் வரலாறும் தெரியாது…
உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது…
உனக்கு என்ன பிடிக்காது என்பதுக் கூட எனக்குத் தெரியாது…
உன் மனதில் வேறு யாரும் உண்டா என்பது கூட தெரியாது…
நான் உன் மனதில் இருக்கிறேனா என்றுக் கூட தெரியாது…
மொத்ததில் உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு…
உனது பெயரைத் தவிர…
ஆனால்…
ஒன்று மட்டும் தெரியும் உன்னைப் பற்றி…
அது உன் நல்ல மனதும், தங்கமான குணமும்…
இவை மாபெரும் பொக்கிஷம் எனக்கு…
அதனால் தான் உன்னிடம் சொன்னேன் என் காதலை…
உன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும்…
உன்னைப் பற்றி புரிந்துக் கொள்ளவும்…
என் ஆயும் முழுவதுமே காலம் இருக்கிறது எனக்கு…
ஆனால்…
இன்னும் என்னிடம் இல்லாமல் இருப்பது…
உன் சம்மதம் தான்…
கண்ணே சம்மதிப்பாயா?
நான் உன் கணவனாக…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
பிப்ரவரி 24, 2020
காலை 06:57 மணி…