Tuesday, December 24, 2024
Home > கவிதை > ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை

ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை

ஏன் உன்னைப் பிடித்திருக்கிறது எனக் கேட்கிறாய்?

எனக்கே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதபொழுது…

நான் எப்படியடி சொல்வேன் உனக்கு பதிலை…

உனக்காக முயற்சி செய்கிறேன்…

கேட்டுக்கொள்ளடி என் கண்ணே…

 

உன் கண்கள் எனக்குப் பிடிக்கும்…

சிரிக்காமல் சிரிக்கும் உன் உதடுகள் எனக்குப் பிடிக்கும்…

உனது புருவத்தின் அழகு பிடிக்கும்…

ஏதேனும் கேள்வி கேட்கையில் உயரும் அந்தப் புருவம் இன்னும் பிடிக்கும்…

உன் மேலே நீ வரைந்துக் கொள்ளும் கோளங்கள் பிடிக்கும்…

உன் பெயரை உன் கையில் எழுதி வைத்திருப்பது பிடிக்கும்…

நான் கண்டுவிட்டால், அதனை நீ அழிக்க முயற்சிப்பதும் பிடிக்கும்…

எதையாவது நீ வாயில் வைத்துக் கொண்டே இருப்பது பிடிக்கும்…

அதை நான் அதட்டுவதும் எனக்கும் பிடிக்கும்…

நீ எண்ணி எண்ணி பேசும் வார்த்தைகள் பிடிக்கும்…

அதிலிருக்கும் மரியாதை எனக்குப் இன்னும் பிடிக்கும்…

நீ தவறு செய்வது எனக்குப் பிடிக்கும்…

அதனை நீ சரி செய்ய போராடுவதும் பிடிக்கும்…

தெரிந்ததை, நான் உனக்குச் சொல்லும் பொழுது, நீ சிரிப்பது பிடிக்கும்…

தெரியாததை, நான் உனக்குச் சொல்லும் பொழுது, நீ விழிப்பது பிடிக்கும்…

நீ வைத்து வரும் பொட்டும் பிடிக்கும்…

நீ உடையணிந்து வரும் விதமும் பிடிக்கும்…

உன் கொழுசு சத்தமும் பிடிக்கும்…

நீ அணிந்திருக்கும் மோதிரமும் பிடிக்கும்…

நீ கழுத்தில் மாட்டியிருக்கும் நூல் போன்ற தங்கச்சங்கிலியும் பிடிக்கும்…

நீ என்னிடம் பேசும் பொழுது உன் தோடு ஆடுவது எனக்குப் பிடிக்கும்…

நீ அணிந்திருக்கும் இரட்டை தோடுகளும் பிடிக்கும்…

உன் முக்குத்தியும் பிடிக்கும்…

உன் முகத்தில் இருக்கும் மச்சங்களும் பிடிக்கும்…

உன் கண்ணீரும் எனக்குப் பிடிக்கும்…

உன் கோபமும் எனக்கு இன்னும் இன்னும் பிடிக்கும்…

இன்னும் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்குதடி…

ஏன் உன்னைப் பிடிக்கும் என்பதற்கு…

நான் விடைத்தெரியாமல் காத்திருக்கும் ஒரே ஒரு கேள்வி…

என்னை உனக்குப் பிடிக்குமா என்பதே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 24, 2020

காலை 07:10 மணி