பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை என்று
என்னிடம் சொல்கிறாய்…
உன் குடும்பத்திற்காக அவனை மணமுடிக்க சம்மதித்துவிட்டாய்…
என்னை மட்டும் ஏனோ அடிக்கடி நினைக்கிறாய்…
என்னைப் பிடித்திருந்தும் பிடிக்கவில்லை என்கிறாய்…
ஏனோ, என் மேல் கொள்ளைக் கோபத்தில் இருக்கிறாய்…
தாமதமாக என் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா?
இல்லை… ஏன் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா?
காதல்… இப்போது காலம் கடந்துவிட்டது…
வாய்ப்புகளின் நேரம் முடிந்துவிட்டது…
நான் ஆகியிருக்க வேண்டும்
உந்தன் கணவனாய்…
நீ ஆகியிருக்க வேண்டும்
எந்தன் மனைவியாய்…
நாம் என்றும் சேர்ந்திருந்திருக்க வேண்டும்
நல்லதொரு குடும்பமாய்…
வாழ்க்கையையே கொண்டாடியிருப்போம்
நாம் இன்பமாய்…
தவறவிட்டுவிட்டோம்…
நம் காதலை…
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இருந்தது நம் காதல்…
இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதடி என் கண்ணே…
நம் மனதிலாவது வாழட்டும்…
நம் காதல்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
பிப்ரவரி 24, 2020
காலை 07:19 மணி…