Monday, December 23, 2024
Home > கவிதை > புன்னகையே உனதழகு… – #கவிதை

புன்னகையே உனதழகு… – #கவிதை

இதுவரை நான் உன்னை இவ்வளவு அமைதியாய் பார்த்ததில்லை…

அது நன்றாகவுமில்லை…

நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவுமில்லை…

ஏன் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருக்கிறாய்…

ஏன் எதையோ தொலைத்ததைப் போலவே நடந்துக்கொள்கிறாய்…

உன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையில்…

தவறாய்…

மாபெரும் தவறாய்…

சொல்லித் தொலைத்துவிட்டேன…

என் காதலை… உன்னிடம்…

அதனால் வந்த கோபம் உன் முகத்திற்கு அழகுதான்…

ஆனால்…

உன் புன்னகையே உன் உள்ளத்திற்கு அழகு…

சில நாட்களாய்…

தீவிரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்…

உன்னையே உன்னிடம்…

உன் முகத்தில் கவலை ரேகையே எனக்குத் தெரிகிறது…

 

என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே…

ஆனால்…

நீயோ காதலில் தோற்றவள் போல நடந்துக்கொள்கிறாய்…

 

உன்னைப் பற்றி நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது…

அழுகையாய்…

உன்னை மறக்க போராடினாலும் நீ மீண்டும் மீண்டும் வருகிறாய்…

என் நினைவாய்…

உன்னிடம் என்னால் எதையும் பேச முடியவில்லை…

உன் கண்களைப் பார்க்கும் சக்தியும் எனக்கில்லை…

உன் முகத்தைப் பார்க்கக்கூட இப்போது எனக்கு தகுதியில்லை…

 

சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருந்த உன்னை…

இப்படி சோகமயமாய் மாற்றிய எனக்கு…

மன்னிப்பே கிடையாதம்மா…

என் நினைவே உனக்கு வரக்கூடாது என…

உன் போன் எண்ணையும் அழித்தேன் என் போனிலிருந்து…

அப்போதாவது என் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்கள் என்னை உனக்கு நினைவுப் படுத்தாமல் இருக்குமென்று…

ஆனால்…

உன் போன் எண்ணை நீக்கும் வரை உன் எண்ணே எனக்கு தெரியாதே…

இப்போது தூக்கத்திலும் உளர்கிறேனே உன் போன் எண்ணை…

எப்படி உன் போன் எண் என் நினைவிற்குள் வந்தது என்றே…

இன்னும் இன்னும் எனக்குப் புரியவில்லை…

 

உன்னைப் எப்போதும் பார்த்துக் கொண்டேயிருக்க…

என் மனம் துடிக்கிறது…

ஆனால்…

நான் உன்னைப் பார்ப்பதால் நீ என்னை விட்டு…

வெகு தூரம் சென்றிடுவாயோ என…

என் உள்ளம் பதறுகிறது…

அதனால்…

உன்னை ஏறேடுத்துப் பார்க்கவே…

என் மனம் என்னைத் தடுக்கிறது….

 

சரிந்துக் கிடக்கும் என் வாழ்வை…

நீ சீராக்குவாய் என்று என் காதலைச் சொன்னேன் உன்னிடம்…

ஆனால்…

அந்தத் தவறு உன்னையே சரிக்கும் என…

கனவில் கூட நான் நினைக்கவில்லையே…

பாவியடி நான்…

உன்னை துன்புறுத்துக்கொண்டிருக்கும் பாவியடி நான்…

 

என் கண்ணே….

உன் கண்களில் ததும்பும் கண்ணீர்…

என்னை உயிரோடு எரிக்கிறது…

உனக்கு நான் செய்த பாவத்திற்காக…

ஒவ்வொரு நொடியும் நான் இறந்துக்கொண்டிருக்கிறேனே…

 

இருந்தாலும்…

இன்னும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு…

உன் கழுத்தில் வேறு ஒருவன் தாலிக் கட்டப்போகும்…

தருணத்தில் கூட…

நீ என்னை நினைத்து…

என்னைத் தேடி நீ வருவாய் என…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 27, 2020

காலை 08.47 மணி…