Tuesday, December 24, 2024
Home > கவிதை > அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்…

அந்தக் கனவிலே…

என் கையில்…

நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது…

உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்…

இரண்டாவது பிரசவத்திற்கு…

என் முகமெல்லாம் கவலை ரேகைகள்…

சில நிமிடங்களில்…

கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்…

வருகிறாள் ஒரு செவிலியர்…

நம் மகன்…

உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்…

நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்…

என் கண்ணே…

உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்…

அந்த நொடியில்…

விழித்துக்கொள்கிறேன்…

நான்…

தினமும் இதே இடத்தில்…

தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது…

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து…

கனவுலகிலே…

உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்…

குடும்பமே நமக்கு இருக்கிறது கனவுலகத்திலே…

ஆனால்…

இப்போது…

இவ்வுலகில்…

நிஜத்திலேயே….

உன் கழுத்திலே ஏறப்போவுது எவனோ கட்டப்போகும் தாலி…

என் கனவுலகிலே, என் பொண்டாட்டியான உன் கழுத்தில்…

எவனோ தாலிக்கட்டப் போகும் அந்த தருணத்தை…

பார்க்கும் சக்தி எனக்கில்லையம்மா…

அதனால்…

தயவு செய்து அழைத்துவிடாதே என்னை…

உன் திருமணத்திற்கு…

இப்படிக்கு…

உந்தன் கனவுலக கணவன்…

நிஜவுலக முன்னாள் காதலன்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 27, 2020

காலை 07.47 மணி…