“ஆர் யூ தேர் இன் த லைன்” என்று போனில் ஹெச்.ஆர் கேட்டார்.
“யேஸ். சார். ஐ யாம்” என்றேன்.
அப்போது தான் நான் என்னை இன்று வரச் சொன்ன ஹெச்.ஆரிடம் பேசிக் கொண்டிருப்பது நினைவில் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் இவரை நேரில் பார்க்கப் போகிறோமே, இப்போது எதற்கு அழைக்கிறார் என்று எனக்குள் வினா எழுந்தது. எதோ வழவழவென்று பேசிவிட்டு முக்கியமான விசயத்திற்கு வந்தார்.
“பிளீஸ். கம் டூ த காபி டே காபி ஷாப் நீயர் அவர் ஆபிஸ்” என்றார்.
அவர் அறைக்கு வரச் சொல்லாமல் ஏன் அங்கே வரச் சொல்கிறார் என்று எனக்குள் யோசனையே வரவில்லை. அங்கே சென்றது மாபெரும் தவறாகிப்போனது.
(அது ஏன் என இன்னும் சில பக்கங்களில் தெரிந்துக்கொள்வீர்கள். முதல்ல நீ நாயகன்-நாயகி பெயரைச் சொல்லு என்று இதனைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகராகீய நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. நல்ல நாள் வந்துவிட்டது. விரைவில் சொல்லிவிடுகிறேன். இவனுக்கு இதே வேலையாகிப்போச்சு என்று நீங்கள் கடுப்பாவதும் எனக்கு புரிகிறது… பொறுமை முக்கியம் அமைச்சரே…)
எனக்கும், அவர் அங்கு வரச் சொன்னதில் பிரச்சனை ஏதுமில்லை. எனது ஆபிஸிற்கு சென்றிருந்தால் தான் எனக்குப் பிரச்சனையே.
ராபினைப் பற்றி ஏதேதோ நியாபகங்கள் வந்து என்னைத் துன்புறுத்தும். அதனால் காபி ஷாப் வரச் சொல்லியது எனக்கு சரியென்றே தோன்றியது.
அவர் வரச் சொல்லிய நேரத்திற்கு, நான் காபி ஷாப்பிற்கு சென்றேன். மனதில் எந்த வித பதற்றமுமில்லை. மேலும், எனது ப்ராஜெக்ட் மேனேஜர் சூசன் எனக்காக அலுவலக இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்திருந்தார். அதனால் வேலை சுலபமாக முடிந்துவிடும். அதனால் கூட காபி ஷாப்பிற்கு வரச் சொல்லியிருக்கலாம். அல்லது எனக்கு இந்த அலுவலகத்திலிருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றலாகிப் போவதற்காக எனக்குத் தெரியாமல் ஏதும் பிரிவு உபசரிப்பு விழா ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று தான் நினைத்து அந்த காபி டே காபி ஷாப்பிற்குள் நுழைந்தேன்.
நான் எதிர்பார்த்த இரண்டு விசயங்களும் அங்கே நடக்கவில்லை. அங்கே நடந்ததே வேறு.
அந்த காலை நேரத்தில் அந்த காபி ஷாப்பில் எனது ஹெச்.ஆரைத் தவிர வேறு யாருமில்லை. அந்த இடமே நிசப்தமாக இருந்தது.
எனது ஹெச்.ஆர் கோட் சூட் போட்டிருந்தார். இருப்பதிலேயே ஒரமாக இருக்கும் டேபிளில் அமர்ந்திருந்தார். பெரிய டேபிளாக இருந்தும் அவருக்கு எதிரே ஒரேயொரு இருக்கை மட்டுமே போடப்பட்டிருந்தது.
நான் அங்கே இருக்கையில் அமர்ந்தேன்.
வழக்கமான உபசரிப்புக்குப் பிறகு, காபி ஆடர் செய்யலாம் என்று சொன்னார்.
ஒரு மெனு கார்டை எடுத்து என் முன்னே நீட்டினார்.
எப்போதும் காபி டே காபி ஷாப்பில் கோல்ட் காபி வித் கிரிம் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
ஆனால் அங்கு ஏதோ தவறாக இருக்கிறது என்று என் மனம் சொல்லியதால், காபி சாப்பிடும் எண்ணத்தையே கைவிட்டேன். அதற்கு பதிலாக, பிஸ்கெட் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டேன்.
அங்கு அந்த பிஸ்கேட்டும் எனது ஃபேவரைட் தான். அவ்வளவு சுவையாக இருக்கும். ஒரு பாக்கெட் பதினைந்து ரூபாய். இரு பிஸ்கேட் மட்டுமேயிருக்கும். கொஞ்சம் அதிக செலவு வைக்கும் கடை தான் ஆனால், சுவை நன்றாக இருக்கும்.
அந்த இடமே ரம்மியமாக இருக்கும். எனது அலுவலக நண்பர்களுடன் அடிக்கடி இங்கு வருவதுண்டு. மேலும் பெரும்பாலான நேரங்களில் செலவுகளை கம்பெனியே ஏற்றுக் கொள்ளும்.
அவர் எக்ஸ்பிரஸ்ஸோ காபி ஆடர் செய்தார்.
“கம்பனி வில் பே ஃபார் திஸ். ஆடர் சம்திங்” என்றார்.
“தேங்க்ஸ் சார். பட் ஐ யாம் நாட் இன் தன் மூட் டூ டிங்க் காபி” என்று மட்டும் சொன்னேன்.
நாங்கள் இருவர் ஆடர் செய்ததும் வந்தது.
அவர் காபி குடித்துக்கொண்டே ஏன் இடமாறுதல் என்று கேள்வி கேட்டார்.
நான் உள்ளதை மறைக்காமல் உள்ளபடி சூசனிடம் எப்படி சொன்னேனோ அதே போன்று இவரிடம் சொன்னேன். இந்தக் கதையை பலரிடம் சொல்லிப் புலம்பியதிலிருந்து இதைப் பற்றி பேசினாலே எனக்குள் எரிச்சலாக வந்தது. இருப்பினும், இவரிடம் சொல்லிவிட்டால், இவர் இட மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டால், வேலை முடிந்தது என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவரிடம் கதையைச் சொன்னேன்.
அவர் துருவித் துருவி கேள்விக் கேட்டு என்னைக் கடுப்பேற்றினார்.
நானும் காரியம் முக்கியம் என்பதனால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.
ஏதோ அவருக்கு வானளாவிய அதிகாரங்கள் இருப்பதைப் போன்று பில்டப் கொடுத்து என் பொறுமையை மேலும் சோதித்துக் கொண்டிருந்தார். இன்றுடன் தொலைந்தார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அவர் ஏதோ சொல்ல வருகிறார், ஆனால் எனோ தயங்குவதைப் போன்று எனக்குத் தோன்றியது.
இந்த ஹெச்.ஆர் எல்லாம் இப்படித் தான் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
“சார். பி ஃப்ராங் வித் மீ சார்” என்றேன்.
அதற்கும் இழு இழுவென இழுத்தார்.
“சார். பிளீஸ் கம் டூ த பாயிண்ட்” என்றேன் கொஞ்சம் கடுப்புடன்.
அப்போது தான் அவன் மெல்ல விசயத்திற்கு வந்தான்.
(இனி ஹெச்.ஆரை அவன் இவன் என்று தான் சொல்லப்போகிறேன். இவனுக்கு இதுக்கு மேல என்ன மரியாதை. பிளடி பாஸ்டேட். சன் ஆப் தி பிட்ச்.)
அவன் சொல்லியதைக் கேட்டதிலிருந்து எனக்கு கோபமே அடங்கவில்லை.
அவன் அப்படி என்ன சொன்னான்???
பதினெட்டாவது பகுதியின் லிங்க்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு