பதினெட்டாவது பகுதியின் லிங்க்…
அப்போது சூசன் என்னை போனில் அழைத்தார்.
அப்போது தான் நான் என் நினைவிற்கு வந்தேன். நாம் அவனை அடிப்பது போன்று நினைத்தது எல்லாம் கனவா? என்னால் அவனை அடித்து துவைக்க முடியவில்லையே. என்னா வாழ்க்கை இது என அலுத்துக்கொண்டேன்.
இவர் மட்டும் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார் என்ற கடுப்பில் நான் முதல் அழைப்பை எடுக்கவில்லை.
என்னால் ஏதும் செய்ய முடியாதா? என்று எனக்குள் ஏக்கம் ஏற்பட்டது. எனக்கு அவன் பேச பேச உடம்பெல்லாம் கூசியது.
நான் என்ன சொல்லப் போகிறேன் என்று அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“திஸ் இஸ் வேரி ராங்”
“ஐ யம் கோயிங் டூ ஃபைல் எ செக்ஸுயூவல் ஹாராஸ்மெட் கேஸ் எகேன்ஸ்ட்டு யூ இன் அவர் ஆபிஸ் அண்ட் வித் த போலிஸ்” என்று மீண்டும் சொன்னேன்.
“கோ வேர் எவர் யூ கேன்”
“ஐ யம் இன் சார்ஞ் ஆஃப் செக்ஸுயூவல் ஹாராஸ்மெட் கமிட்டி”
“ஐ வில் சீ திரூ தட் யுவர் கேஸ் கோஸ் டீ த டஸ்ட்பின்” என்றான் திமிராக.
எனக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை. இவனுக்கு எவ்வளவு தைரியம், நம்மை இப்படி மிரட்டுகிறானே.
அடுத்து என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் யோசித்தேன். இனி இந்த கம்பெனியில் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியது.
உடனே, “தென். ஐயம் ரிசைனிங் மை ஜாப்” என்று அவனிடம் சொன்னேன்.
“யூ காண்ட் ரிசைன் லைக் தட்.”
“ஐ கேன்”
“யூ ஹேவ் சைண்ட் எ பாண்ட் ஃபார் 10 லேக்ஸ்”
“ஐ வில் செட்டில் இட் பை டூடே இவனிங்.”
“வீல் சீ” என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து கிளம்பிவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களிலே மீண்டும் சூசன் அழைத்தார். நான் மீண்டும் அழைப்பை எடுக்கவில்லை. அவர் முன்றாவது முறை அழைக்கும் போது வேறு வழியின்றி எடுக்க வேண்டியதாகிப் போனது.
அவரிடம் பேசிக் கொண்டே நான் அந்த காபி டே ஷாப்பிலிருந்து வெளியேறினேன்.
இன்று செய்ய வேண்டிய வேலைகளைச் சென்னார். நான் கேட்டுக் கொண்டேன். இன்னும் சில தினங்களில் ப்ராஜெட் டிப்லாய் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“ஆர் யூ ஆல் ரைட்” என்று கேட்டார்.
“மேம். ஐ யம் ரிசைனிங் ஃப்ரம் மை ஜாப் வித் எஃபக்டிவ் இமிடியெட்லி. தேங்க் யூ ஃபார் ஆல் யூர் சப்போர்ட் மேம். சாரி மேம்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க முயன்றேன்.
அதற்குள் அவர்
“வாட்?”
“வை?” என்று நிறைய கேள்விக் கேட்டார்.
நான் ஹெச்.ஆருடன் காபி ஷாப்பில் நடந்ததைச் சொன்னேன். பொறுமையாக நான் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்.
எனக்கு ஆறுதல் கூறினார். அவசரப் பட வேண்டாம் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார். நான் முடிந்ததைச் செய்கிறேன் என்று எனக்கு நம்பிக்கையளித்தார்.
அவருடன் பேசியது எனக்கு ஆறுதலாக இருந்தது.
சூசன் சில விசயங்களை செய்யச் சொன்னார்.
அது என்னவென்றால்…
– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…
எழுத்து – பட்டிக்காடு