Tuesday, December 24, 2024
Home > கவிதை > மீளாத் துயிலில் நீங்கள்… மீளாத் துயரில் நாங்கள்…

மீளாத் துயிலில் நீங்கள்… மீளாத் துயரில் நாங்கள்…

என் அறையிலிருந்து எட்டிப் பார்த்தேன்…

நீங்கள்…

எங்கள் கல்லூரி விடுதி மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தீர்…

நான் உங்களை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்…

நான் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்த்தீர்…

என்னை அழைத்தீர்…

தாயில்லா என் மகனை இந்த விடுதியில் விட்டுச் செல்கிறேன்…

என்றீர்…

அவனையும் கொஞ்சம் அரவனைத்துக்கொள்ளப்பா என்றீர்…

அவனுடன் நட்பு பாரட்டப்பா என்று கேட்டுக்கொண்டீர்…

என்னை மன்னியும் அப்பா…

தங்கள் மகனிடம் நட்பு பாரட்டியதை விட…

வாக்கு வாதம் செய்ததே அதிகம்….

ஆனாலும்…

அவன் விடுதியில் இருந்த வரை…

நான் அவனைப் பார்த்துப் பேசாத நாளில்லை…

எவ்வளவு சண்டையிட்டாலும் நாங்கள் பிரிந்ததேயில்லை…

எங்களுக்கு…

நீங்கள்…

தந்தையை இல்லாமால்…

நண்பனாய் இருந்தீரே…

அவனுக்கும்… எனக்கும்…

அவன் உங்களுடன் எவ்வளவு சண்டையிட்டாலும்…

அவன் உங்களை எவ்வளவு எதிர்த்து பேசினாலும்…

எந்த கோபமும் கொள்ளாமல்…

அவனை…

குழந்தை…

குழந்தை என்று அழைப்பீரே…

தாங்கள் நடைபயிற்சிக்குச் செல்லும் தருவாயிலும்…

அவனையும், என்னையும் அழைத்துச் செல்வீரே…

வந்ததும் அருமையான ஐயரராத்து காபி தருவீரே…

நாங்கள் வர எவ்வளவு தாமதமானாலும்…

இன்முகத்துடன் வரவேற்பீரே…

எங்கள் மீது தவறே இருந்தாலும்…

யாரிடமும் எங்களை விட்டுக்கொடுக்காமல் இருப்பீரே…

தனிமையிலே எங்கள் தவறை எடுத்துரைப்பீரே…

எங்குச் சென்றாலும் சொல்லிவிட்டு செல்வீரே…

இப்போது ஏன் தங்களின் அன்புக் குழந்தையிடம்…

சொல்லாமல்… சென்றுவிட்டீரே…

மீளாத்துயிலுக்கு சென்றுவிட்டீரே…

உங்கள் மீது எங்களுக்கு கோபம் அப்பா…

நீங்கள் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க வேண்டி…

ஆனால்…

நேரம் முடிந்துவிட்டது வா…

என்று..

அழைத்துக்கொண்டானே இந்த எமதர்மன்…

என்று கேட்பேன்…

இனி உங்கள் சிரிப்பை…

இனி உங்கள் குரலை…

என்று காண்பேன்…

இனி உங்கள் முகத்தை…

இப்படிக்கு…

தங்களுக்குப் பிறக்காத…

ஒரு அன்பு மகன்…

தங்களின் ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா…

மீளாத் துயிலில் நீங்கள்…

மீளாத் துயரில் நாங்கள்…

(என் ஆரூயிர் நண்பனின் அப்பாவிற்கு சமர்பணம்…)

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

பிப்ரவரி 29, 2020

மதியம் 02.32 மணி…