இவ்வளவு நாள் ஏன் என் கனவில் வரவில்லை என…
உன்னை கோபித்துக்கொள்வதா…?
இல்லை…
இப்போது ஏன் மீண்டும் என் கனவில் வந்தாய் என…
உன்னை கோபித்துக்கொள்வதா…?
வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் நீ…
என்னை…
தொந்தரவே செய்யவில்லை அதன் பின்னே நான்…
உன்னை…
ஏதோவொரு சக்தி சேர்த்துவைக்க நினைக்கிறதா…?
நம்மை…
என் எனக்கு இப்படியொரு…
நிலைமை…
உன்னை நினைத்தாலே என் மனம் ஏனோ…
வலிக்கிறதே…
உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க என் மனம் ஏனோ…
துடிக்கிறதே…
ஒதுங்கித்தானே இருந்தேன் இவ்வளவு நாள் உன்னைவிட்டு…
ஏன் பேசினாயோ என்னிடம் உன் மெளனத்தை கலைத்திவிட்டு…
இப்போது…
மீண்டும் மெளனமாகிவிட்டாயே என்னை புலம்ப விட்டுவிட்டு…
என்ன நடந்தாலும்…
உன் சம்மதத்தை…
நீ சொல்லும் வரை…
உனக்காகக் காத்திருப்பேன்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
மார்ச் 18, 2020
காலை 10.58 மணி…