Tuesday, December 24, 2024
Home > கவிதை > என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

உனக்கு நான் இழைத்த கொடுமைக்கு…

என்ன பதில்…?

என்னால் நீ விடும் கண்ணீருக்கு…

என்ன பதில்…?

இன்னும் உண்மையை நெஞ்சிக்குள்ளேயே வைத்திருக்கும், உன் நற்குணத்திற்கு…

என்ன பதில்…?

என்னை எப்போதும் காட்டிக்கொடுத்திடாத, உன் நல்லுள்ளத்திற்கு…

என்ன பதில்…?

தவறே செய்யாத, உன்னை தண்டித்தேனே…

அதற்கு என்ன பதில்…?

நீ படும் மன வேதனைக்கு என்ன பதில்…?

உறக்கமில்லாமல் தவிக்கும் உனக்கு என்ன பதில்…?

என்னால் நீ இழந்த சுதந்திரத்திற்கு என்ன பதில்…?

என் மேல் நீ வைத்த அதீத நம்பிக்கைக்கு என்ன பதில்…?

என் மேல் நீ கொண்டிருக்கும் கோபத்திற்கு என்ன பதில்…?

உன்னை பலர் முன்னால், கூனிக்குறுக வைத்ததற்கு என்ன பதில்…?

பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்துவிட்டேனே…

அதற்கு என்ன பதில்…?

உன் இயலாமையை, நான் சுயநலப்படுத்தியதற்கு…

என்ன பதில்…?

உன் பெண்மையை சுரண்டியத்ற்கு என்ன பதில்…?

என் ஆண்மையை நிலைநாட்ட முயன்றதற்கு என்ன பதில்…?

கண்ணகியடி நீ…

கோவலனடி நான்…

பாண்டிய மன்னனின் தவறிக்கு, பதிலாய்…

அந்தக் கண்ணகி, ஊரையே எரித்தாள்….

அது பழைய வரலாறு…

கண்ணே… நான் செய்த தவறுக்கு… பதிலாய்…

நீ என்னையே எரித்து…

புது வரலாறு படைத்துவிடு…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மார்ச் 21, 2020

மதியம் 03:18 மணி…