Monday, December 23, 2024
Home > கவிதை > காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே

வருவதல்லவே காதல்…

பிரிந்தே போனாலும் தோற்காதே

இந்தக் காதல்…

எவ்வளவு சண்டைகள் வந்தாலும்

மறக்கடிக்கும் இந்தக் காதல்…

முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து

புன்னகைக்க வைக்குமே காதல்…

சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில்

என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்…

சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என

புரியவைக்கும் நல்ல காதல்…

கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட

ஒளிவீசுமே காதல்…

தோற்றால், உலகையே

இருட்டாகும் இந்தக் காதல்…

மரணத்தின் நுழைவுவாயிலை கூட,

முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்…

ஏனென்று தெரியாமலே,

வரும் இந்தக் காதல்…

யாரிடமும் சொல்லாமலேயே

போய்விடுமே இந்தக் காதல்…

மீண்டும் மீண்டும் யார் மேலாவது

பிறக்குமே இந்தக் காதல்…

பிரிந்து போனவர்களையும்

மறக்க விடாது இந்தக் காதல்…

எவரையும் எதிர்க்க வைக்குமே

இந்தக் காதல்…

எவருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாதது

இந்தக் காதல்…

 

புன்னகைக்கும் உதடுகளில் ஒட்டுதலில்லை…

காதலில் வென்று, ஒன்றுசேர்வதைப் போன்று, வேறு ஒன்றுமில்லை…

ஒன்றுசேராமல் போனாலும்,

அந்தக் காதலின் வலி தரும் சுகம் போல வேறொன்றுமில்லை…

உலகில்லாமல் காதலேயில்லை…

இந்த காதல் இல்லாமல் உலகமில்லை…

வாழ்க வாழ்க வாழ்கவே…

இந்தக் காதல்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 28, 2020

மாலை 04.11 மணி…

(என் மனதிற்குள் குடியிருக்கும் மேடம் ஜீ அவர்களுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்)