இந்நேரம்…
விந்து தள்ளும் குறியாய் இருந்திருந்தால்…
அறுத்தெரிந்திருப்பேன்…
இறைவன்…
எனக்கு யோனியைப் படைத்துவிட்டான்…
நெஞ்சில் மயிறு மட்டுமிருந்தால்
இந்நேரம் அறுத்தெரிந்திருப்பேன்…
இறைவன்…
எனக்கு பால் சுரக்கும் முலையைப் படைத்துவிட்டான்…
என் யோனியினுள்…
நாற்றமெடுக்கும் விந்தினை
நுழைக்கத்தான்…
எத்தனை எத்தனை குறிகள் அலைகின்றன…
என் முலையை கசக்கிப்பிழிய…
பண்டமென நினைத்து அதனைச் சுவைக்க…
எத்தனை எத்தனை உதடுகள் காத்திருக்கின்றன…
என் குறியினை துணைக்கு அழைக்காமல்…
திட்டக்கூட…
யோக்கியதையில்லாத…
ஆணினமே…
இதோ என் அறைக்கூவல்…
இந்தப் பொட்டை காத்திருக்கிறாள்…
குறியறுத்துவரும் ஆடவனுக்காக…
வீரமுள்ள ஆண் மக்களே…
தீராணியிருந்தால்…
தைரியமிருந்தால்…
குறியறுத்து வாரீர்..
என் மனதை தருகிறேன்…
வருவீரா???
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
ஜூலை 29, 2020
மதியம் 01:30 மணி…