ஓடிவிட்டாதே பல மாதங்கள்…
அவளுக்கு யாருடனோ திருமணமாகி…
ஏனோ என்னால், இன்னும் அவளை…
மறக்கத்தான் முடியவில்லை…
அவள் கண்களின் பார்வை தான்…
இன்னும் இருக்கிறதே…
உயிர்ப்புடன்…
என் கண்ணுக்குள்ளே…
இது தான் காரணமோ…
அவள் நினைவு வரும் வேளையில்…
என் கண்களில் நீராய் வடிய…
அந்நேரங்களில்…
நெஞ்சிலே சுரக்கிறதே ஒரு வலி…
போதையாய்…
வலி தரும் போதைக்கு நான் அடிமை…
அந்த போதையில்…
அவளை நான் மறக்காமல் இருக்கின்றேன்…
வலியால் இன்னும் துடிக்கின்றேன்…
அவளின் நினைவுக்கொண்ட பொழுதெல்லாம்…
இன்னும் என் இதயம் ஏனோ துடிக்கிறது..
நானும் துடிக்கிறேன்…
இன்னும் அவளுக்காக…
வாழ்க…
என் அன்பே…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
ஜூலை 27, 2020
மதியம் 02.08 மணி…