Monday, December 23, 2024
Home > கவிதை > அது காதலாய்… – #கவிதை

அது காதலாய்… – #கவிதை

பெண்ணின் புன்னகை

கிளர்ச்சியைத் தூண்டும்…

அதனை உணர

நல்ல பயிற்சி வேண்டும்…

அந்தப் பயிற்சி

நல்ல முயற்சியை தூண்டும்…

முயற்சியே

காதலை வெளிக்காட்ட உதவும்…

வெளிக்காட்டிய காதலில் தான்

அன்பே பிறக்கும்…

அன்பின் பிறப்பில்

காதல் துவங்கும்…

காதல் துவங்கியபின்னே

புரிதல் துவங்கும்…

புரிதல் திருமணமென்னும்

புதயலைக் கொடுக்கும்…

தீயவனுக்கும், கயவனுக்கும்

அது கசக்கும்…

நல்லவனுக்கும் வல்லவனுக்கும்

அது இனிக்கும்…

ஆம்…

இனிக்கும்…

கடைசிவரை…

அது காதலாய்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 28, 2020

மாலை 04.30 மணி…