Monday, December 23, 2024
Home > கவிதை > காதல் என்னும் பேரலை – #கவிதை

காதல் என்னும் பேரலை – #கவிதை

புன்னகை உணர்ச்சியைத் திறக்கும்…

உணர்ச்சி காதலைத் திறக்கும்…

காதல் முத்தத்தைத் திறக்கும்…

முத்தம் காமத்தைத் திறக்கும்…

காமம் கூடலைத் திறக்கும்…

கூடல் உச்சத்தைத் திறக்கும்…

உச்சம் மனநிம்மதியைத் திறக்கும்…

நிம்மதி நல் வாழ்க்கையைத் திறக்கும்…

வாழ்க்கை உலகத்தை திறக்கும்…

உலகம் நம் அறிவை திறக்கும்…

அறிவு பொருளைத் திறக்கும்…

பொருள் மேண்மையைத் திறக்கும்…

மேண்மையே புன்னகயைத் திறக்கும்…

பெண்ணின் புன்னகையே…

இங்கே காதலின் திறவுகோல்…

 

காதல் என்றென்றும் புரிந்துக்கொள்ளவே முடியாத ஒரு புன்னகை…

புரிந்துக்கொண்டால்…

அது நினைவே கொள்ள முடியாத ஒர் நினைவலை…

அதுவே காதல் என்னும் பேரலை…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 28, 2020

மாலை 04.40 மணி…