Monday, December 23, 2024
Home > கவிதை > அடியே பொண்டாட்டி… – #கவிதை

அடியே பொண்டாட்டி… – #கவிதை

அடியே பொண்டாட்டி…

நீயே என் வழிகாட்டி…

நீயே என் நாட்காட்டி….

நீயே என் திசைக்காட்டி…

நீயே என் வாழ்வின் படகோட்டி…

 

அடியே பொண்டாட்டி….

இனி போட மாட்டேன் உன்னுடன் போட்டி…

என் இதயம் இனி பனிக்கட்டி…

நீ அதை உருக்கும் தீச்சட்டி…

நீ என்னை அடக்கும் பாம்பாட்டி…

நம் பிள்ளைகளின் முலையூட்டி…

 

அடியே பெண்டாட்டி…

ஆட மாட்டேன் வாலாட்டி…

இனி உன்னை மிரட்டி…

நினைக்க மாட்டேன் வைப்பாட்டி…

துரத்த மாட்டேன் உன்னைவிரட்டி…

 

அடியே பொண்டாட்டி…

உன் காலில் போட்டேன் நான் மெட்டி…

உன் நெற்றியிலே குங்குமம் சூட்டி…

உன் தலையிலே பூச்சூட்டி…

ஒட்டுமொத்த ஊரைக்கூட்டி….

கொண்டாடினேன் அதையொட்டி…

திருமணமொன்னும் நிகழ்வொட்டி…

 

அடியே பொண்டாட்டி…

நீயே என் புள்ளகுட்டி….

இனி கூப்பிடும் இடம் வருவேன் பெட்டிகட்டி…

அன்பை நாமும் கொட்டி…

காதலை கொஞ்சம் ஊட்டி…

வாய்ப்புகளெல்லாம் திரட்டி…

எதிரிகளையெல்லாம் விரட்டி…

நீதியை நாமும் நிலைநாட்டி…

அரியனையில் அமர்ந்திடுவோம் வெற்றியீட்டி…

 

அடியே பெண்டாட்டி…

வந்துவிடு என்னையொட்டி…

இல்லாவிடில், உன் கண்ணீரைக் கொட்டி…

அடிக்க வேண்டும், நீ கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி…

அடியே பொண்டாட்டி…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

செப்டெம்பர் 22, 2020

மாலை 06.48 மணி…