பட்டாம்பூச்சியாய் வந்தாள்…
தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்…
தெரிந்தவர்களுடன் பேசினாள்…
எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்…
என்னருகில் வந்தாள்…
வண்டியிலே சாய்ந்துக்கொண்டாள்…
என்னருகில் நின்றவரிடம் பேசினாள்….
அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை நான்…
யாரென்றே தெரியாத, அவள் மீது கொண்ட வெட்கத்தால்…
பேச்சுவாக்கில் அவ்வப்போது அவரை சீண்டினாள்…
சீண்டலில், என்னையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்…
செய்வதறியாது, நான் நெளிய…
அவளை ஒரக்கண்ணால் பார்க்க…
அதனை அவள் பார்க்க…
ஒன்றும் நடக்காததைப் போல நான் நெளிய…
அதை அவள் கண்டுகொள்ள…
நான் மாட்டிக்கொண்டு விழிக்க…
அவன் என்னைப் பார்த்து…
மீண்டும் சிரித்தாள்…
என் பார்வை மங்கியது…
அவளைத் தவிர ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை…
அவள் பேசுவதும் செவிகளில் கேட்கவில்லை…
அவளின் நெற்றியிலிருந்த கடுகளவுள்ள பொட்டும்…
அவள் அணிந்திருந்த கண் கண்ணாடியும்…
அவளின் மெல்லிய தோடும்…
கண்களுக்கு புலப்படாத தங்கச் சங்கிலியும்…
மங்களகரமான மஞ்சள் சுடிதாரும்…
தலைநிறைந்த மல்லிகைப் பூவும்…
அவளின் வார்த்தைகளுக்கு தளமிடும் வளையல்களும்…
நின்ற இடத்திலேயே விளையாடும் அவள் காலின் பிஞ்சு விரல்களும்…
மாலைக் கதிரவனின் ஒளிக்கதிரில் மின்னும் அவள் மேனியும்…
மழைச்சாரலின் வாசத்தைவிடவும்…
அவள் மேனியின் வாசம்…
என்னைக் கிளர்ச்சியடையச் செய்ததே…
பார்க்கவில்லை தான்…
ஆனால், மேலுள்ள விரிவனைகளைத் தவிர…
அவளை நான் பார்க்க பார்க்க…
அவளை நான் ரசிக்க ரசிக்க…
மிகவும் பிடித்துத்தான் போனதே அவளை…
அவளுக்கும் என்னைப் பிடித்தால்…
காதல் என்னும் விபத்தால்…
இருவர் மனமும் இணைந்தால்…
அவள் என் மனைவியாக வந்தால்…
அதுவல்லவா உச்சம்…
வருவாளா…?
என் மனைவியாக அவள்…???
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
செப்டெம்பர் 28, 2020
மதியம் 01.00 மணி…