தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா சமயலறைக்குச் சென்று மூவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்தாள். அந்த நேரத்தில் அந்த காபி எனக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் சூரியன் மறைந்திருந்தது.
காபி குடித்துவிட்டு, டம்ளரை அடுப்படியில் கழுவி வைத்துவிட்டு, நானும் சோபனாவும் பாட்டியின் அறையில் இருந்தோம்.
“திவ்யா” என்று தாத்தா என்னை அழைத்தார்.
“என்ன தாத்தா”
“நீ சீக்கிரமா வீட்டுக்கு கிளம்பனும்”
“ஏன் தாத்தா?”
“எல்லா வருவாங்க”
“எதுக்கு?”
“பிரச்சனை ஆயிடுச்சில்ல”
“அதனால என்ன?”
“சொன்னா புரிஞ்சிக்கோ”
“சரி”
“போயிட்டு ரெண்டு நாள் கழிச்சிவா”
“ம்”
“கோவமா?
“ஆமா”
தாத்தா அமைதியானார், நானும் அமைதியானேன். சோபனா என்ன நடக்கிறது என்று தெரியாமல் என்னையும் தாத்தாவையும் மாற்றி மாற்றி பார்த்தாள். வீட்டைவிட்டு வெளியில் செல்வதற்குள் சுனில் மாமாவும், அருணும் வீட்டிற்கு வந்தார்கள்.
அவர்களிடன், “திவ்யாவை அனுப்பிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு எங்களுடன் தாத்தா வீட்டிற்கு வெளியே வந்து, என்னையும் திவ்யாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டார்.
ஊர் பெரியவர்களும், தாத்தாவின் நண்பர்களும் நடந்ததை கேள்விப்பட்டு, ஆறுதல் சொல்ல வருவார்கள் என்பதல் என்னை வீட்டிற்கு கிளம்ப சொல்லிவிட்டார். மனிதர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, நல்லதற்கு ஒன்று கூடுகிறார்களோ இல்லையோ, ஏதேனும் கெட்டது நடந்துவிட்டால், ஒன்றுகூடி, ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கிறார்கள்.
ஏன் இப்படியெல்லாம் எனக்கு நடந்தது என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு கடுப்பாக இருந்தது. தாத்தாவை நேரில் பார்த்து, நடந்ததெல்லாம் சொல்வதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. இனி யார் நினைத்தாலும் நடந்ததையெல்லாம் மாற்றவா முடியும்? குறைந்தபட்சம் அவருடன் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.
எனக்கு வீட்டிற்குப் போக விருப்பமில்லை. அதனால், சோபனாவை லோக்கல் ரயில்வே ஸ்டேசனில் இறக்கிவிட்டப் பிறகு, நான் வழக்கமாக செல்லும் அந்தேரி பப்பிற்கு சென்றேன்.
நாற்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்…
எழுத்து – பட்டிக்காடு
[…] நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்&… […]