பெண்ணே…
உன் முடிவுகளை கேள்வி எழுப்பும்
அதிகாரம் எனக்கில்லை…
அதை தெரிந்துக்கொண்டிருக்க
அப்போது எனக்கு புத்தியில்லை…
அது கொடுத்த, கசப்புகளால்,
நீ என்னை விட்டு போகாத தூரமில்லை…
இப்போது பழையதெல்லாம் பேசி
ஒரு பயணுமில்லை…
உன் வாழ்க்கைப் புத்தகத்தில்
நான் ஒரு பக்கம் தான்…
என் நினைவுகள் உனக்கு தருவதெல்லாம்
வெறும் துக்கம் தான்…
என்னைப் பிரிந்ததே உனக்கு
வெற்றிகரமான ஒரு துவக்கம் தான்…
என்னால் இனி உன் வாழ்வில்
இல்லவேயில்லை முடக்கம் தான்…
உன் நினைவுகள் எழுப்பும் அலையோசையில்
எனக்கில்லை உறக்கம் தான்…
என்னை மூழ்கடிக்கும் அந்த நினைவுகள் தரும் வலியெல்லாம்
வெறும் தொடக்கம் தான்…
என்னுள்,
இன்னும் நீ இருக்கிறாய்…
நினைவுகளாய்,
என்னைவிட்டு விலக மறுக்கிறாய்…
ஏதுமில்லை,
இதில் உன் தவறு…
உன்னை,
மறவாதிருப்பது என் தவறு…
என்றென்றும்,
இருக்க நினைக்கிறேன் தனியாக…
எப்போது இருப்பேன் அன்பே,
எல்லாம் உன் நினைவாக…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
ஜூலை 23, 2021.
மதியம் 12:00 மணி…
Superb ?? keep going…